உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமை குலத்தது . 107

கெஞ்சம் திடுக்கிட்டது. அதற்குத் தான்தானே காரணம் என்பதை கினேத்தவுட்ன் அழுகையும் வந்துவிட்டது. வீரப் பனும் மார்த்தாண்டனும் பேசி முடிவுசெய்ததை எப்படியோ ஒட்டுக்கேட்டு அறிந்துவிட்டாள் அழகி. அவள் தன் கணவனே இத்ற்கெல்லாம் சேர்த்துக்கொள்ளவில்லையே என மகிழ்ந்தாள். ஒருவேளை அவனுக்குத் தெரிந்தால் அவன் தனக்குச் சொல்ல, தான் மற்றவர்களுக்குச் சொல்லி விட்டால் என்னுவது என்று தனியாக அவர்கள் கினைத்திருக் கலாம் என நினைத்தாள். ஒரு வகையில் தன் கணவன். இதி லெல்லாம் சேராதிருப்பது அவளுக்கு மகிழ்ச்சிதான். வீரப்பனும் மார்த்தாண்டனும் தம் பேச்சை முடித்துவிட்டு வெளியே வந்தார்கள். அழகி தான் ஒன்றும் அறியாதவ. ளெனக் காட்டிக்கொள்ள மாளிகையில் உட்புறத் தாழ்வாரத் தில் படுத்துக்கொண்டாள். முருகன் உள் அறையில் உறங் கிக்கொண்டிருந்தான். மார்த்தாண்டன், உடனே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டான். வீரப்பன் சுற்றிவந்து ஒரு முறை பார்த்துவிட்டு, கதவைத் தாளிட்டுவிட்டு, மேலறையில் சென்று படுத்துக்கொண்டான்.

அன்று புதன்கிழமை, அடுத்த நாள் வியாழக்கிழமை இரவுதான் மறுபடியும் அழகி வண்ணுரப்பேட்டைக்குச் செல்லவேண்டிய நாள். அன்று எப்படியும் கடந்தவற்றைச் சொல்லி உடனே அவர்களைக் கைது செய்யவேண்டிய ஏற். பாடுகளே யெல்லாம் ஆய்ந்துகொண்டிருந்தாள். எப்படியோ பொழுது விடிந்தது. விரப்பன் வெளியே சென்றுவிட்டான். அவன் அழகியைக் கண்காணித்தே வந்தான். முருகன் ஏதோ வேறு வேலை இருக்கிறதென்று சொல்லி வெளியே சென்றுவிட்டான். அன்றைப் பொழுது கழிந்தது. இரவு பதிைெரு மணியாகிவிட்டது. முருகன் உள் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான். மெதுவாக அடிமேல் அடி வைத்து வெளிவந்தாள் அழகி. அன்று வீரப்பன் அங்கு வரவில்லை என்று சொல்லிவிட்டது நல்லதாயிற்று என்று அவள் கினைத்தாள். ஆனல் பாவம், அவன் தன் செயலைப் பின்னிருந்து கவனித்து வந்தது எப்படித் தெரியும் அவளுக்கு அழகி செல்லச் செல்ல அந்த உருவமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/108&oldid=580161" இலிருந்து மீள்விக்கப்பட்டது