பக்கம்:துன்பச் சுழல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 துன்பச் சுழல்

துாரத்தே அவள் அறிந்துகொள்ளாதபடி பின்னலேயே சென்று கொண்டிருந்தது. வண்ணுரப்பேட்டை (ரயில்கேட்) அருகில் செல்வநாதரும், கமலாம்பாளும் முன்னமே வந்திருந்தனர். அவர்கள் மூவரும், நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். வெகுதூரத்தே இருந்ததால் வீரப்ப னுக்கு அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதே கேட்கவில்லை. என்ருலும் ஏதோ ஒரு சூட்சிதான் கடக் கிறது என்பதை மட்டும் அவன் அறிந்தான். கார்ப்பொ ரேஷன் விளக்கில் அந்த அம்மாள் கமலாம்பாள் என்பது மட்டும் தெரிந்தது. ஆண் யார் என்று தெரியவில்லை. உடனே ஒடிச்சென்று அப்படியே மூவரையும் கொன்று விடலாமா என நினைத்தான். ஆனல் தனியனேக் கொல்வதாகத் தான் விரும்பும் எண்ணம் கைகூடாது என அவன் கருதினன். மற்றும் அவன் கையில் ரிவால்வரைக்கொண்டு வரவில்லை என்பதையும் உணர்ந்தான். நெடுநேரம் அவர்கள் பேச்சு முடியும்வரை அப்படியே கின்றுகொண்டிருந்து, பிறகு அழகி புறப்பட்டதும் அவனும் திரும்பின்ை.

அழகி, கமலாம்பாளுக்கும், செல்வநாதருக்கும் அங்கு கடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் விளக்கமாக உரைத்தாள். அந்தப் பாவி வீரப்பன் ஏனே தனியன் உயிரின்மேல் கண் வைத்திருக்கிருன்? மார்த்தாண்டன் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்காததைப் பற்றியும் விளக்கி உரைத்தாள். உடனே போலீஸ் வந்து அவர்களைக் கைதுசெய்யாது போனல் கிலேமை மோசமாகி விடுமென்றும் உரைத்தாள். தானும் அக்கூட்டத்தில் ஒருத்தியாக இருந்து சிறைசெல்லத் தயங்கவில்லையென்றும், தனியனைக் காட்டிக்கொடுத்த பாவத் திற்காக அந்தக் கொடுமையும் வேண்டியதுதான் என்றும் கூறினள். என்ருலும் செல்வநாதர் அவளைச் சாட்சியாக ஆக்கிக்கொண்டு பிறகு விடுதலை செய்ய வழி காண்பதாகவும் கூறினர். அவள் விடுதலை யென்ருல் தன் கணவனகிய முருக னுக்கும் இருந்தால்தான் தான் வெளி வருவதாகவும், இன் றேல் அதுபற்றி எண்ண வேண்டாமென்றும் கூறினள். அவ ளது அன்பின் கிலையை எண்ணி எப்படியும் அவர்கள் இரு வரையும் மீட்பதாகவே கூறினர் செல்வநாதர். நேரம் அதிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/109&oldid=580162" இலிருந்து மீள்விக்கப்பட்டது