பக்கம்:துன்பச் சுழல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமை, குலத்தது. ! 09

மாகிவிடவே மறுநாள் காலை எப்படியும் ஏழு மணிக்குள் போலிசுடன் அவள் குறிப்பிட்ட மாளிகைக்கு வருவதாகவும் அப்போதே எல்லோரையும் கைது செய்துவிடலாம் என்றும் கூறினர் செல்வநாதர். அழகியும் அன்று காலே ஏழு மணிக் குள் மார்த்தாண்டன், வீரப்பன் இருவரும் வீட்டில் இருப் பார்களென்றும், அவர்களே அப்போதே கைது செய்யலாம் எனவும் கூறினள். பிறகு பிரிந்தனர்.

மறுநாள் வெள்ளிக்கிழமை, விடியுமுன் எப்படியும் வீரப்பன் அழகியைத் தீர்த்துவிடவேண்டுமென எண்ணிக் கொண்டான். அவள் இருந்தால், தான் கினைத்ததெல்லாம். கைகூடாது என்று கருதினன். பொழுது விடிந்ததும் முருகனும் அழகியும் எழுத்து காப்பி அருந்திக் கொண்டிருந் தார்கள். வேகமாக அறையினுள் புகுந்தான் வீரப்பன். கையில் ரிவால்வர் காட்சி அளித்தது. முகம் கோபத்தால் கறுகறுத்தது. பற்களே கறகறவென்று கடித்தான். முருக னுக்கு அவன் செயல் ஒன்றும் விளங்கவில்லை. அழகி ஒரு வேளை தான் செய்த சூழ்ச்சி எல்லாம் வெளியாகிவிட்டதோ என்று அஞ்சி நடுங்கினுள். முருகன் நடுங்கும் அழகியை அப் படியே அணைத்துக்கொண்டு. வீரப்பனேப் பார்த்தான். வீரப் பன் கோபம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அண்ணு, என்ன இப்படி எதிர்பாராது?’ என்று கேட்டான் முருகன். வீரப்பன் தானும் மார்த்தாண்டனும் தனியனைக் கொல்லச் சதி செய்திருப்பதாகவும், அதையெல்லாம் அழகி அவனது உறவினர்களுக்கு இரவு நேரங்களில் இரகசியமாகச் சென்று சொல்லி வருவதாகவும், ஆகவே அவள் தங்கள் உயிருக்கே உலே வைப்பதாகவும் கூறி ஒரு கோபப் பார்வையை அழகி யின்மேல் செலுத்தினன். இந்த நாய் இரவு எங்கே சென் றது என்று கேள் எனக் கத்தினன். தன் மனைவியை மாற்ருன் பழித்துரைப்பதைக் கண்டு பொருவிட்டாலும் உண்மை அறிய அழகியை முன்ந்ாள் இரவு எங்கு சென்ருய் எனக் கேட்டான். அவள் தான் எங்கும் செல்லவில்லை எனவும், அங்கேயே முன் தாழ்வாரத்தில்தான் படுத்துக் கொண்டிருந்ததாகவும் கூறினள். முருகன் வீரப்பனே நோக்கினன். வீரப்பனின் கோபம் முன்னேயினும் அதிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/110&oldid=580163" இலிருந்து மீள்விக்கப்பட்டது