உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 துன்பச் சுழல்

மாயிற்று. பொய் சொல்லவும் தெரியும் போலும் என்று படபடத்தான். அவளேத் தன் வசம் ஒப்புவிக்க வேண்டு மெனவும் அதிகாரத்தோடு வீரப்பன் கேட்டான். அதைக் கேட்ட முருகனுக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன. எங்கிருந்தோ தண்டச் சாப்பாட்டுக்கு வந்த அவனுக்கு அவ்வளவு அகங்காரமா என்று கொக்கரித்தான். தன் உயிர் போலைன்றி அழகியை அவ்வளவு எளிதில் வீரப்பன் கொல்ல முடியாது என்று திட்டமாகக் கூறினன். வீரப்பனே இருவரையும் கன்கு வைதான். அழகியைக் கொல்ல ரிவால்வரைச் சரி செய்தான். ஆனல் அதற்குள் முருகன் தாவிச் சென்று ரிவால்வரைப் பற்றினன். இரு வருக்கும் சிறிது கேரம் சண்டை நடந்தது. எப்படியும் ரிவால்வரைத் தள்ளிவிட்டால் அழகி எடுத்துக்கொள்வாள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முயன்ருன் முருகன். ஆனல் பாவம், அந்தச் சண்டைக் கிடையிலே ரிவால்வரி லிருந்து புறப்பட்ட குண்டானது முருகன் மார்பைத் துளைத் தது. ஐயோ என்று கதறி மண்மேல் சாய்ந்தான். வெற் றிக் களிப்போடு எழுந்த வீரப்பன் கொக்கரித்தான். இதோ பார் உன் பரிசு என்று மற்ருெரு குண்டை அழகியின் மார்புக்கு நேராகச் செலுத்தினன். அவள் ஐயோ என்று கதறி வீழ்வதற்கும், பின்பக்கம் மார்த்தாண்டன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவன் புகுந்ததும் தன் மகனும், மருமகளும் குண்டுபட்டு வீழ்ந்து கிடப்பதைக் கண்டான். ஒன்றும் யோசிக்காது, அப்படியே கோபக் கொழுந்து எழ, தன் துப்பாக்கியே தன் மகனுக்கும் மரு மகளுக்கும் எமனுக வந்ததா என்று எண்ணிக்கொண்டு பின்பக்கம் சென்று, எட்டி, வீரப்பன் கையிலிருந்த ரிவால் வரை பிடுங்கிக் கொண்டான். வீரப்பன் திருதிரு என விழித்தான். அவர்களைக் கொன்ற காரணத்தை வீரப்ப னிடமிருந்து கேட்க விரும்பவில்லை மார்த்தாண்டன். அவன் தான் கொன்ருன் என்பதை நேரேயே கண்டுவிட்டானே. 'உண்ட வீட்டுக்கு இரண்டகம்' என்று உரக்கக் கத்தியது அவன் வாய். இன்னும் அந்த ரிவால்வரில் இருந்த குண்டு ஒன்று, இதோ இந்தா உன் கொலைக்குப் பரிசு என்று கூறிக்கொண்டே அவன் அருகில் சென்ருன். வீரப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/111&oldid=580164" இலிருந்து மீள்விக்கப்பட்டது