பக்கம்:துன்பச் சுழல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமை குலைத்தது 1 11

ஏதோ சொல்ல வாயெடுத்தான். வேண்டாம் உன் பேச்சு. கான் உன் பேச்சில் மயங்கமாட்டேன். என் அருமை மகன், அவனது அன்பின் மனைவி, அவர்களைக் கொன்ற உன்னிடம் என்ன பேச்சு. பேயே, போதும் உன் உலக விளையாடல். ஒழி என்று சொன்னன். அவன் சொல்லே ஆமோதிப்பது போன்று ரிவால்வரிலிருந்த குண்டு வீரப்பன் உடலே ஊடுருவியது.

வீரப்பன் வீழ்வதற்கும் செல்வநாதர் போலீஸ் அதி காரிகளுடன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவர்களேக் கண்ட மார்த்தாண்டன் கையிலிருந்த ரிவால் வரை வீசி எறிந்துவிட்டு ஒட்டம் பிடித்தான். பின்புறமாக மாளிகையை விட்டு வெளியேறினன். அவனைத் துறத்தி வந்த போலீஸ்காரர்களும் ஒரு இன்ஸ்பெக்டரும் பின் தொடர்ந்து ஒடிக்கொண்டே யிருந்தனர். உள்ளே வேறு சில போலீஸ் உத்தியோகஸ்தர்களும், செல்வநாதரும் இருந் தனர். பெரிய கொள்ளேயிடமாதலால் தக்க பாதுகாப் போடு, இரண்டு மூன்று போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு அதிகாரி, பல போலீஸ்காரர். இவர்களுடன் செல்வநாதர் வந்து சேர்ந்தார். என்ருலும் அவர் வருவதற்குள் இவ் வாறு ஆகியிருக்கும் என்று அவர்கள் நினைக்கவேயில்லை. ஒருபுறம் அழகி வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அவள் மூச்சுமட்டும் ஒடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் தண்ணிர் கொண்டுவரச் சொல்லி வாயில் ஊற்றிஞர். பாவம், அவளால் பேச முடியவில்லை. கண் விழித்துப் பார்த்தாள். செல்வநாதரைக் கண்டாள். 'ஆ' என்ற அலறலுடன் அவள் ஆவி பிரிந்தது.

அவளைத் தாங்கிக் கொண்டிருந்தார் செல்வநாதர். போலீஸ் தலைவர்கள் முருகனேச் சோதித்தனர். அவன் உயிர் நீங்கியிருந்தது. வீரப்பன் சற்று அசைந்து கொடுத் தான். தண்ணிர் வேண்டுமென்று காட்டினன். தண்ணிர் கொடுத்தார்கள். சுற்றுமுற்றும் பார்த்தான். செல்வநாதர் இருந்த பக்கம் திரும்பின்ை. அன்ணு, அண்ணு' என்று மெல்ல அழைத்தான். தன்னை அவன் அண்ணு என அழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/112&oldid=580165" இலிருந்து மீள்விக்கப்பட்டது