பக்கம்:துன்பச் சுழல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 துன்பச் சுழல்

பதற்குக் காரணம் என்ன என்று அறியாத செல்வநாதர் அவன் அருகில் சென்ருர். போலீஸ் தலைவர்களும் உடன்

அவன் பக்கத்தில் வந்தனர். ஏதோ பேச அவன் விரும்

பினன். எல்லோரையும் அருகே அழைத்தான். தான்

சொல்லப் போவதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டு மெனப் போலீஸ் அதிகாரியை வேண்டிக்கொண்டான்.

மரண் வாக்கு மூலம் தேவை என்பதை அறிந்த அந்த

போலீஸ் அதிகாரியும் அப்படியே குறிப்பு எடுக்கத் தயா

ரானர். செல்வநாதர் மட்டும் அவன் தன்னை அண்ணு என்று ஏன் அழைத்தான் என்பதை எண்ணி எண்ணிப்

பார்த்தார். அவன் தலையைத் தூக்கித் தன் துடையின்மேல்

வைத்துக்கொண்டார். வீரப்பன் வேதனைகளுக்கிடையே, விம்மலுக்கிடையே ஒவ்வொரு சொல்லாகச் சொன்னன். அவன் சொன்னவை இவைதான்:

‘அண்ணு' உன்னே அண்ணு என்று அழைப்பதற்குப் பலரும் வியக்கத்தான் செய்வர். ஒரு கள்ளக் கூட்டத் தலைவன், கொலேயாளி உன்போன்ற ஒரு உத்தம மனிதருக் குத் தம்பியாவதா என்று பலரும் கினேப்பார்கள். நான் யார் என்று நீயே அறியமாட்டாய். என்னேப் பார்த்தே தான் பல ஆண்டுகள் ஆயினவே. நான் உன் தம்பிதான். உனது சிறிய தந்தையார் கோடீச்வரருடைய மகன் முருகே சன்தான் நான். இதை சொல்லிய உடன் செல்வநாதர் முகம் விரிந்தது. அவன் மேலும் சொன்னன்: ‘அண்ணு, என் தந்தையார் கையில் உள்ள பொருளையெல்லாம் செலவு செய்து, விளையாடி, இழந்துவிட்டார். அந்தத் துன்பத்தி லேயே அவர் இறந்துவிட்டார். இவைகளெல்லாம் நீ அறிய மாட்டாய். அன்று நீ இங்கே இல்லையே. வடநாட்டுச் சாந்தினிகேதனத்தில் தானே படிக்கச் சென்றிருந்தாய். அப்போது நான் பதினேந்து வயதுப் பையன்தான். என்ரு லும் இளமையில் ஒன்றுமறியாத நிலையில்-அந்த வயதில் தந்தையைப் பறிகொடுத்த என் உள்ளம் உடைந்தது. உன் தந்தையாரிடம்-என் பெரியப்பாவிடம்-ஏதேனும் உதவி பெறலாம் என விரும்பினேன். அவர் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி வெறுத்துப் பேசியதோடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/113&oldid=580166" இலிருந்து மீள்விக்கப்பட்டது