உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமை குலத்தது 113

எங்கள் வீடு வாசல்களையும் அவர் பாக்கிக்காக நீதிமன்றத் தின் மூலம் தமதாக்கிக் கொண்டார். நான் வேறு வழி யின்றி அன்று முதல் இத் தொழிலைத்தான் மேற்கொண் டிருக்கிறேன். பெயரையும் மாற்றி வைத்துக்கொண்டேன். அண்ணு, நீ ஏன் சாந்தினிகேதனம் அனுப்பப்பட்டாய் என் பதும் தெரியும். திருவண்ணுமலைப் பக்கத்திலிருக்கும் அத்தை வீட்டில் உள்ள பெண்ணே நீ காதலித்ததும், அவள் கருத்தரித்ததும், அதை அறிந்து நீ அவளே மணக்க விழைக் ததும், பெற்ருேர் அதை விரும்பாமல் உன்னே ஊரைவிட்டுப் போக்கவே சாந்தினிகேதனம் அனுப்பினர்கள் என்பதையும் நான் அறிவேன். இதைக் கூறி முடித்ததும் அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அனோவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். செல்வநாதர் கண்ணில் நீர்த்துளி கள் தென்பட்டன. சிறிது கின்று பிறகு, அவன் பேசத் தொடங்கின்ை : அண்ணு, நீ சென்ற பின் அவள்-உன் காதலி-என் அண்ணி, திருவண்ணுமலே மருந்தகத்தில் ஒரு மகனைப் பெற்று, உயில் சாசனம் முதலியன எழுதி, அவற் றையும், உன் புகைப்படத்தையும், பெற்ற பிள்ளையையும் அந்த விடுதிப் பெண் வைத்தியரிடம் ஒப்படைத்து இறந்து விட்டாள். இறப்பதில் அவள் மகிழ்ந்தாளாம். என்ருவது நீ வந்து அவற்றைப் பெற்ருல் யாரோ ஒழுக்கங் கெட்டவள் என்று உலகம் அவளே இகழாதல்லவா? அந்த மருந்தகத்தில் அனேத்தையும் கொடுத்து, அந்தப் புகைப்படத்துக்கு உரிய வர் வந்தால் எல்லாவற்றையும் ஒப்படைக்கச்சொல்லிச் சென் ருராம். அவள் கொடுத்த பெட்டியில் என்ன இருக்கிறதென் பதை யாரும் அறியார். அண்ணு அது உன்னுடையது. அங்கு அனதையாக்கப்பட்ட பையன் பிறகு வழக்கப்படி , மாணவர் விடுதியில் சேர்க்கப்பட்டான். கடைசியில் நமது உடன் பிறந்த கமலாம்பாள் வீட்டில் இன்று உன் அன்பிற் குப் பாத்திரமாக இருக்கின்ற தனியன் உன் மகன்தான் அண்ணு' என்ருன் வீரப்பன். அவன் கண்ணில் நீர் கசிந்தது. செல்வநாதர் 'ஆ' என்று அலறிவிட்டார். அவன் மேலும் சொன்னன் . அண்ணு, இன்னும் கேள். நீ சாந்தினிகேதனத்திலிருந்து திரும்பி வருவதற்குள் ளாகவே உன் பெற்ருேர் இறந்து விட்டார்கள். நீ வந்ததும்

8 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/114&oldid=580167" இலிருந்து மீள்விக்கப்பட்டது