பக்கம்:துன்பச் சுழல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 துன்பச் சுழல்

அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு சிறக்க வாழ்வாய் என்று நினைத்தேன். நீயோ மணமேல் வேண்டாமென்று மறுத்து, அைைத விடுதி அமைத்து ஏழைகளுக்குப் பணி செய்யத் தொடங்கிவிட்டாய். இந்த உலகத்தாரும் நீ வட நாட்டுச் சாந்தினிகேதனத்தில் படித்த காரணத்தாலே இந்தத் தியாக உணர்ச்சி வந்ததென்றும் நீ உண்மையில் உயர்ந்தவன் என்றும் பேசிக்கொள்ளுகிருர்கள். ஆனல் நான் அறிவேன் நீ அைைத விடுதி அமைத்த காரணத்தை. சாந்தினிகேத னத்திலிருந்து வந்த பெற்ருேர்கள் விட்டுச் சென்ற கணக்கு முதலியவற்றையும் பிறவற்றையும் கவனித்துவிட்டு நேராகத் திருவண்ணுமலைப் பக்கம் சென்றதை அறிவேன். அங்குக் கிராமத்துக்குச் சென்று விசாரிதது, பின் மருந்தகம் வந்த தும் தெரியும். நீ அங்கு செல்லுமுன் அந்த மருந்தகத்தின் தலைமைப் பெண் மருத்துவர் இறந்துவிட்டதல்ை தக்க தகவலை நீ பெறவில்லை. இறந்த அந்தப் பெண் மருத்துவர், அந்தப் பெட்டியையும், புகைப்படத்தையும், அத்துடன் குழந்தையின் முகத்தில் இருக்கும் மரு' அடையாளத்தை யும், மருத்துவப் பெருந் தலைவரிடம் கொடுத்து உரியவர் வந்தால் சேர்க்குமாறு சொல்லிவிட்டு இறந்தாள். நீ உடனே சென்ருல் அந்தத் தகவல்களேயெல்லாம் பெறலாம் என்ருன், செல்வநாதர் அவன் தலையை நன்கு நிமிர்த்தி உற்று நோக்கி ஞர். மறுபடியும் தண்ணிர் அளித்தார். அவனுக்கோ குண்டு வேதனை வரவர அதிகமாயிற்று. செல்வநாதர் முகத் தில் வியப்பும் சோகமும் அதிகமாகத் தாண்டவமாடின. அதைக் கண்டு மேலும் தட்டுத்தடுமாறிப் பேசத் தொடங்கி ன்ை வீரப்பன்.

அண்ணு, இந்த இரகசியங்களெல்லாம் எனக்கு எப் படித் தெரியும் என்றுதானே நீ கேட்கிருய் ஆம். அந்தக்

கேள்வியை உன் பார்வையும் முகக்குறிப்புமே கேட்கின்றன.

நான் எனது பெரியப்பா உதவி செய்ய மறுத்ததும் அவரை

யும் அவர் மகளுகிய உன்னேயும் பழிவாங்க வேண்டுமென்று முடிவு செய்தேன். அதற்கு ஏற்ருற்போல இந்த திருட்டுத்

தொழிலும் அமைந்தது. அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

வந்ததும் உன்னைக் கவனித்துக்கொண்டே வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/115&oldid=580168" இலிருந்து மீள்விக்கப்பட்டது