பக்கம்:துன்பச் சுழல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமை குலைத்தது 115

அதற்குமுன்பே சாந்தினிகேதனம் சென்றபோது செல்லம் மாள்த்ான் காரணம் என்று வீட்டிலுள்ளோர் பேசிக்கொண் டதை அறிந்தேன். ஆதலால் அங்குச் சென்று தனியனைப் பற்றியும், அவர் தாயாரைப் பற்றியும் எல்லாத் தகவல் களையும் அறிந்து வந்தேன். இடையிடையே என் வயிறு வளர்க்க இந்தத் திருட்டு வேலையும் செய்துவந்தேன். இரண் டொரு முறை சிறையும் சென்றேன். நீ உன் செல்வியைப் பெருத காரணத்தால் அைைத விடுதி அமைத்து ஆறுதல் பெற்ருய், உன் மைந்தன் கம்செல்வன் அைைதயாக இது வரை வாழ்ந்தாலும் எப்படியோ உன்னே வந்தடைந்தான். அண்ணு அதை அறிந்த பிறகுதான் என் கொடுமை உச்சநிலை அடைந்தது. தனியன் உன்னிடம் வந்தபின் இதோ இந்த அழகியால் பிடிக்கப்பட்டான். என்ருலும் நான் என்றைக் காவது ஒருநாள் அவனே நீ கண்டு பிடிப்பாய் என்றும் ஆகவே அவனைச் சிறையில் தள்ள வேண்டுமெனவும் எண்ணித்தான் பிரம்பூர்க் களவில் அவனேச் சேர்த்தேன். அது கைகூடாத பொழுது அவனைச் சுடவும் செய்தேன். அது காலில் பட்டுத் தவறியது. தற்போது அவன் அத்தையால் நன்கு போற்றப்படுவதாலும் யுேம் அவனிடம் அன்புகொண்டிருப்ப தாலும் எப்படியும் நீ அவனே மகனென்று கண்டுகொள்வாய் எனக் கருதினேன். அவனே அதற்குள் கொன்றுவிட்டால், நமது மூதாதை வழிவந்த உன் செல்வமெல்லாம் என்ருவது எனக்குத்தானே என்று எண்ணினேன். உனக்கு மனே வியோ, மக்களோ இல்லாத காரணத்தால் பங்காளி என்ற முறையில் நானே எல்லாச் செல்வத்துக்கும் உரியவனுவேன் என்றே கருதினேன். அண்ணு, சொல்லப் பயமாக இருக் கிறது. தேவையானல் உன்னேயும் கொல்ல கினேத்தேன். இதோ அதன் பலனே இன்று பெற்றுவிட்டேன். என் இரகசியங்களை யெல்லாம் உன்னிடம் சொல்லிய இதோ இந்த அழகியையும், அவள் கணவனேயும் நானே கொன்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/116&oldid=580169" இலிருந்து மீள்விக்கப்பட்டது