உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியவன் ஆளுன் 123

ஒன்றும் இருந்தது. அதைக் கண்டதும் அப்படியே கதறி விட்டார் செல்வநாதர். பிறகு மருத்துவர் தேற்றத் தேறி, ர்ை. எப்படியாவது தனியன் தன்னிடம் வந்து சேர்ந்தானே என்பதை எண்ணும்போது உளம் மகிழ்ந்தார், செல்லம் மாளுடைய பொருள்களை யெல்லாம் பெற வழிகாண வேண்டு மென முயன்ருர். என்ருலும் உடனே சென்னை சென்று அனேவரையும் கண்டு, தனியன் தன் மகன் என்பதையும் எடுத்து விளக்கிக்காட்டிய பின்னரே வேறு வேலை என்று முடிவு செய்துகொண்டார். அந்த மருத்துவரை வணங்கி, நன்றிகூறி, விடை பெற்றுக்கொண்டு அன்று இரவே சென்னே செல்லும் இரயிலில் திரும்பினர். எத்தனையோ எண்ணங் கள்-இன்ப துன்ப நிகழ்ச்சிகள்-அவர் உளப்படத்தில் கிழ லாடின. . .

நேராக மாம்பலத்தில் இறங்கித் தன் கடமைகளை யெல் லாம் முடித்துக்கொண்டு, அனதை விடுதிக்குப் போனர். மறுநாள் அங்குள்ள அனைவருக்கும் நல்ல விருந்து உண் டென்று கூறினர். அதற்கேற்ற ஏற்பாடுகளேயெல்லாம் செய்யுமாறு அதன் தலைவருக்குத் தெரிவித்துவிட்டு, அதற் காக இருநூறு ரூபாய் தனியாகக் கொடுத்துவிட்டு எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்கொள்ளச் சொன்னர், விருந்தின் காரணத்தை மட்டும் யாருக்கும் சொல்லவில்லை. எல்லோருக் கும் ஒரே வியப்பாக இருந்தது. பிறகு காரிலேயே தான் கொண்டுவந்த பெட்டியுடன் பிரம்பூருக்குச் சென்ருர். அவரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்த கமலாம்பாள் 'வா அண்ணு! எல்லாம் நாம் எண்ணியபடிதானே' என்று கூச்சலிட்டாள். உணர்ச்சிப் பெருக்கால் தன் தலையை ஆட்டி விட்டு உள்ளே சென்ருர் செல்வநாதர். தனியன் எங்கே என்ருர் கமலாம்பாள் ஒடிச் சோலையிலிருந்த தனியனேக் க்ட்டிக் தழுவிக்கொண்டு கலிதிர்க்க வந்த கண்ணே என்று முத்தமிட்டாள். செல்வி மணிமேகலை ஒன்றும் அறியாதவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/124&oldid=580177" இலிருந்து மீள்விக்கப்பட்டது