பக்கம்:துன்பச் சுழல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 துன்பச் சுழல்.

தன் மகனே என்று ஐயமறத் தெளிந்தார் செல்வநாதர். தெரிந்தகம் அப்பெட்டியில் என்ன இருக்கிறது என்று காண முயன்ருர். அந்த மருத்துவர் முன்னிலையிலே அப் பெட்டியைத் திறந்தார். பெரு நம்பிக்கைக்கு இருப்பிட மாகிய கிறித்தவப் பாதிரிமார்கள் எவ்வளவு அக்கரையோடு அந்தப் பெட்டியைப் பாதுக்காத்தார்கள் என்பதை எண்ன எண்ண உளமகிழ்ந்தார். தான் ஒரு சிறு அைைத விடுதி கடத்துவதை மக்கள் பெருமையாகப் பாராட்டுவதை எண்ணி ர்ை. ஊர்தோறும், நாடுதோறும், மக்கள் வாழும் இடக் தோறும் சென்று, உலகுக்கு உயிரிந்த இயேசுவின் திருப் பெயரைப் பரப்புமுகத்தான்.கிறித்தவப் பாதிரிமார் செய்யும் செயல்களை யெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்தார். இன்று காட்டில் உள்ள பலபெரு மருந்தகங்கள், கல்விச் சாலைகள், கருத்தமைக்க அமைப்புக்கள் அனைத்தும் அக்கிறித்தவப்பெரு மக்களது மனவளல்ை ஆயின அன்ருே என்று எண்ணினர். அதே வேளையில் நம் நாட்டிலும் சமயம் வளர்ப்பதாக வாய்ப் சிம் சாற்றி வயிறு வளர்த்தும், ஆடம்பரத்தில் பொழுது போக்கியும் வரும் மக்கள் நெறியினையும் எண்ணினர். என்ன, அப்பெட்டியைத் திறந்தும் உள்ளிருப்பதைக் காணவில்லையே’ என்று எதிரிலிருக்கும் மருத்துவர் கேட்ட பிறகுதான் தன் ேேன வுட ன் பெட்டியை நோக்கினர் செல்வநாதர். தனது மற்ருெரு புகைப்படம் மேலேயே இருந்தது. செல்லம்மாளுடைய படமும் இருந்தது. அவளுக்கு அவளு டைய பெற்றேரால் எழுதிவைக்கப்பட்ட சாசனங்கள் இருந்தன. அவற்ருல் அவளுக்கு, நிறையச் செல்வம் உன்டென்றும், அவற்றைப் பங்காளிகள் பயன் படுத்து கின்ருர்கள் என்றும் அவர் அறிந்தார். அவற்றுடன் தான் எழுதிய காதற் கடிதங்களில் சில இருந்தன. அவற்றைக் காணுந்தோறும் செல்வகாதர் உள்ளம் கைந்தார். கண்ணிர் கசிய நீர் பெருக்கெடுத்தது. அவளுடைய அழகிய படம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/123&oldid=580176" இலிருந்து மீள்விக்கப்பட்டது