பக்கம்:துன்பச் சுழல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியவன் ஆளுன் 125

தனியன் செல்வநாதர்தான் தன் தந்தை என அறிந்து, கொள்ள நெடுநேரமாயிற்று. தான் இளமையில் செல்லம்மா ளோடு இருந்ததையும், திரும்பி வருவதற்குள் செல்லம்மாள் அவனைப்பெற்று இறந்ததையும், அவன் அைைதயாகச் சுற்றித்திரிவதையும், அவனே எப்படியும் கண்டு பிடிக்கலாம். என்று. யாருக்கும் கூருது அைைத விடுதி தொடங்கி நடத் தியதையும், அவ்விடுதியில் அவனேக் காணுவிட்டாலும் வேறு எப்படியோ கண்டெடுக்கப்பட்டதையும் நன்கு விளக்கிவந்த செல்வநாதர் அவன்து குழந்தைப் படத்தைக் காட்டி, முக மருவே அவனே அறிமுகப்படுத்திற்று என்றும் கூறினர். அப்பா என்று அலறி அவன் அப்படியே செல்வநாதரைச் சேர்த்து அணைத்துக்கொண்டான். அவரும் அவன் முதுகைத் தடவிக்கொடுத்தார். மணிமேகலை தன் தாயைப் பார்த்தாள். அவளைச் சேர்த்து அணேத்து 'உன் அத்தானே விடாதே' என்று சொல்லிக்கொண்டாள் அன்னேயார். செல்லம்மாளின் அன்புப் பரிசான தனியனுக்காகவே அவர் மறுமணமும் செய்துகொள்ளாதிருந்ததை யெல்லாம் எடுத்துக் கூறி இனி எல்லாத் துன்பத்தையும் மறந்துவிடவும் சொன்னர். செல்வ நாதர் கள்வர் தம் ஒழிவு பற்றியும் பிற தகவல்களையும் கூறி, இனி அனைவரும் ஒன்றுபட்டோம் என்றும் மகிழ்ந்தார். கமலாம்பாள் இருவரையும் கிற்கவைத்துத் திட்டிகழித்தாள். இறுதியாகத் தான் நினைத்த மைந்தன் கண்டுபிடிக்கப்பட் டான் என்பதை அறிய அளவிலா மகிழ்ச்சி அடைந்த செல்வநாதர் மறுநாள் அைைத விடுதியிலிருக்கும் விருந் தைப் பற்றிக் கூறினர். அனைவரும் அன்று மாலேயே மாம்பலம் செல்ல ஏற்பாடு செய்தனர். -*

மாலை ஐந்து மணிக்கெல்லாம் செல்வநாதர் அனைவரை யும் தன் வீட்டில் கொண்டுவந்து விட்டார். முன் ஏற்பாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/126&oldid=580179" இலிருந்து மீள்விக்கப்பட்டது