பக்கம்:துன்பச் சுழல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 துன்பச் சுழல

டின் படியே வேலைக்காரர்கள் பெருவிருந்துக்குத் தயார் செய்திருந்தனர். விருந்துக்கு முக்கியமான உறவினர்களை அழைக்கவும், தனியனுக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கவும் செல்வநாதர் வெளியே புறப்பட்டுச் சென்ருர். உள்ளே சென்ற தனியன் வெளிக்கூடத்தில் மாட்டியிருந்த செல்லம்மாளின் படத்தின் முன் மண்டியிட்டு அன்னேயே உன்னே என் அன்னயென்று அறிவதன் முன்னமே ே என் உள்ளத்தை ஈர்த்தாய், இதோ இன்று அறிந்து உன்னே வணங்குகிறேன்' என்று சொல்லிக் கண்ணிர் பெருக அழுதான். வேலைக்காரர்கள் கூடிவிட்டனர். கமலாம்பாள் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கி, அந்தப் படம் செல்வநாதர் மனைவியுடையதென்றும், தனியன் அவர்தம் மகனென்றும் கூறினர். அனைவரும் மகிழ்ந்தனர். தனியன் முன்னமே அங்கு இருந்தவன் ஆதலால் அவனே யாவரும் அறிவர். அன்று ஒரு அைைதயாக இருந்தவன் இன்று வீட்டுக்கே தலைவகை வந்ததைக் குறித்து மகிழ்ந்தனர். அறியா முன்பே, செல்வநாதர் அவனிடம் பற்றுக்கொண் டதை எண்ணும்போது, பாசம் எப்படியாவது பற்றிக் கொள்ளும் என்பதை அவர்கள் எண்ணுதிருக்க முடியவில்லை. அன்று இரவில் விருந்து சிறப்பாக நடைபெற்றது.

மறுநாள் பொழுது விடிந்தது. அன்று அைைத விடுதி யில் விருந்து. பல நண்பர்கள் அங்கும் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். செல்வநாதர், கமலாம்பாள், தனியன், மணிமேகலை ஆகிய நால்வரும் காரில் புறப்பட் டனர். அைைத விடுதியின் வாயிலில் கார் கின்றது. அகுதை விடுதியில் அனைவரும் புகுந்தனர். தனியனும் அந்த அைைத விடுதியில் கால் வைத்தான். அைைதயாக அல்ல. ஆம், பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/127&oldid=580180" இலிருந்து மீள்விக்கப்பட்டது