பக்கம்:துன்பச் சுழல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலிலே பிறந்தான் .13

குறித்து அப்பெட்டியுள் இட்டாள். நன்கு பூட்டி முத்திரை இடச்செய்தாள். அதை அந்த மருத்துவ அம்மையிடமே கொடுத்து, பையன் பெரியவனை பின் வந்து கேட்டால் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டாள். அந்த மருத்துவ அம்மை நல்லவர்கள் : கிறித்தவ சமயத்தவர். செல்லம்மாள் நிலைகண்டு இரங்கினர். அவள் மைந்தனுக்கு ஒரு குறையும் வாராது என்பதைப் பலவகையில் எடுத்துக் காட்டினர். இயேசு அவள் குழந்தையைக் கைவிடமாட் டான் என்ருர். அவளுக்கும் பரமண்டலத்தில் இடம் உண்டு என்ருர் . அவள் சொன்னதைக் கேட்டாளோ இல்லையோ, செல்லம்மாள் உயிர் அந்த மருந்தகத்திலேயே ஐந்துநாள் குழந்தையின் பக்கத்திலேயே உடலேவிட்டு நீங் கிற்று. சிறக்க வாழப் பிறந்த செல்லம்மாள் நம்பிக்கைத் துரோகத்தின் காரணத்தால் உயிரிழந்தாள் என்ருலும் அங் தக் குழந்தையைவிட்டுச் செல்வது ஒன்றிலேதான் அவள் முகம் அமைதியுற்றதாகக் காணப்பட்டது.

நம் நாட்டில் கிறித்து சமயத்தார் செய்யும் தொண்டு போற்றற்குரியது. உலகம் வாழச் சிலுவை ஏறிய செம்மலின் அருட்பணியை மேற்கொண்ட பல்லோர் நாடெங்கனும் பணியாற்றுகின்றனர். அவர்தம் மெய்ம்மைப்பணி நாட்டில் இல்லையானல் இன்று நாம் காணும் இத்துணைக் கல்வி நிலையங்களும், மருத்துவ விடுதிகளும் இல்லை. பொதுவாக எண்ணின் நம்நாட்டின் கல்வியும் பிறகலன்களும் அச்சமயத் தாரின் அறப்பணியாலேயே வளர்ந்தன என்று கூறல் பொருந்தும். அத்தகைய கிறித்தவ குல ஆச்சிரமத்தைச் சேர்ந்த ஒரு மருந்தகத்தேதான் செல்லம்மாள் தனது மைந்தனே விட்டு உயிர்துறந்தாள். இறந்தவளே உரிய முறை யில் அடக்கம் செய்தபின், அவளுக்கு உற்ருர் உறவினர் யாரும் இல்லை என்பதை அறிந்த மருந்தகத்தார் அவள் இ ற ங் த தகவலே ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. ஐந்து நாள் நிரம்பிய ஒர் அருமைக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு அவர் களுக்கு ஏற்பட்டது. ஆல்ை அவ்வாறு குழந்தைகளே. வள்ர்ப்பது அவர்களுக்கு ஒன்றும் அரிய காரியமன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/14&oldid=580067" இலிருந்து மீள்விக்கப்பட்டது