பக்கம்:துன்பச் சுழல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2 துன்பச் சுழல்

பேசிக்கொள்வதைச் சிறிதே கேட்டாள் ; மகிழ்ந்தாள்; அப்படியே மறுபடியும் தன்னே மறந்தாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. தனக்கு மகன் பிறந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் செல்லம்மாள். மருத்துவர் அவளுக்குச் செய்யவேண்டிய எல்லா வைத்திய முறைகளேயும் செய்துவிட்டார்கள். குழந்தை 'குவா என அழுதது. கட்டியணேத்தாள் செல்லம்மாள். நல்லபடியே பிரசவம் ஆயிற்றே என்று பேசிக்கொண்டார்கள் பலர். குழந்தை மிக அழகாக இருக்கிருன் என்ருர்கள். முகத்தில் சந்தனப் ப்ொட்டுப்போல எவ்வளவு அழகான அகலமான மச்சக்குறி என்ருர்கள். அவற்றையெல்லாம் கண்மூடிய படியே கேட்டுக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். மெது வாகக் கண் திறந்து இளங்குழந்தையைக் கண்டாள். மகிழ்ந்தாள். ஆனல் அவள் முகம் கவலேயால் மாறுபட்டது. இன்னும் சில நாட்களில் மருந்தகத்திலிருந்து விடுவிக்கப் பட்டால், பிறகு எங்குச் செல்வது, யாருடன் வாழ்வது, என்ற பெரும் சிந்தனே அவள் உள்ளத்தை உருக்கியது. ஏதோ தந்தையின் உயில் மூலம் சிறிது பொருள் வாழ்வுக்கு இருப்பினும் பொருள் ஒன்றுமட்டும் வாழ்வின் தேவை யைப் பூர்த்தி செய்யாது என்பதை அவள் உணர்வாள். அந்த உணர்வே அவள் உயிருக்கு இயமனுகவந்து சேர்க் தது. காள் ஒன்று இரண்டு மூன்று என்று உருண்டோ டிற்று. அவள் உடல் கில்ே கவலைக்கிடமாக அமைந்து கிடக் தது. மருத்துவர்கள் அவள் மனநோயைமாற்ற எவ்வளவோ முயன்ருர்கள். அவர்கள் தம் கிறித்தவ விடுதியிலேயே தங்கி, காலம் கழிக்கலாம் என்று சொல்லித் தேற்றிய போதிலும், அவள் மனம் மாறவில்லை. அப்படியே மகனைப் பெற்ற ஐந்தாம் நாள் அவனை விட்டுப் பிரியவும் நினைத்து

விட்டாள்.

அவளது பெற்ருேர்கள் கொடுத்த பெட்டியை அந்த மருந்தகத்தின் தலைமைப் பெண்மருத்துவரிடம் வைத்திருந் தாள். இறக்குமுன் அப்பெட்டியைப் பற்றிக் கூறினுள். அத்துடன் தன் மகன் நெற்றியில் உள்ள அடையாளத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/13&oldid=580066" இலிருந்து மீள்விக்கப்பட்டது