உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலிலே பிறந்தான் 11

களேக் காணும் அந்த அண்ணுமலை மருத்துவர் மனமிரங்கிச் செல்லம்மாளின் முழு வரலாற்றையும் கேட்டறிந்தார். உடனே பெண் வைத்தியரைக் கூப்பிட்டுப் பிரசவ விடுதிக் குச் செல்லம்மாளே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அவருக்கு நன்றி செலுத்திவிட்டுச் செல்லம்மாள் அப்பெண் மருத்துவருடன் தனி விடுதிக்குச் சென்று சேர்ந்தாள்.

பிரசவ விடுதியில் பலர் இருந்தனர். சில குழந்தைகள் பிறந்து இரண்டொரு நாட்கள்தான் ஆயின என்பதையும் கண்டாள் செல்லம்மாள். தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை எப்படி யிருக்குமோ என்று எண்ணமிட்டாள். ஒரு சிலர் பிறந்த குழந்தைகளுடன் கொஞ்சிக் குலவு வதைக் கண்டாள். இன்னும் சில நாட்களில் தானும் அவ் வாறு கொஞ்சிக் குலாவலாம் என்று கோட்டை கட்டினுள். வரவர அவளுக்கு வலி அதிகமாயிற்று. மருத்துவர்கள் பாலும் உணவும் கொடுத்தார்கள். முன்னுள் இரவு கண் விழித்த காரணத்தாலும், பயணக் களைப்பாலும் அப்படியே படுக்கையில் உறங்கிவிட்டாள். விழித்துப் பார்க்கும்போது இன்கு இருட்டி விட்டது. அருணேயில் அந்த இருளேக் கிழித்துக்கொண்டு ஆண்டவன் கோயிலில் அடிக்கும் மணி ஒலி எங்கும் பரந்தது. அண்ணுமலேயானே, எனக்கு ஏன் இந்தக் கொடுமை? என்று எண்ணிள்ை செல்லம்மாள். குழந்தை பிறந்தால் பிறகு அக்குழந்தையுடன் மருந் தகத்தை விட்டு எங்கே செல்வேன்' என்று சிந்தை நொங் தாள். உடல் நோய் அதிகமாயிற்று. அவள் வருத்தம் கண்ட பெரிய பெண் வைத்தியர் தக்க கர்சுகளே உடன் இருக்கச் செய்தார். செல்லம்ம்ாள் தன்னை மறந்தாள். எவ் வளவு நாழி அப்படி இருந்தாளோ அவளுக்குத் தெரியாது. நடு இரவின் அழுைதி அந்த அருணேயிலும் ஆண செலுத் திற்று. மருந்தகத்திலும் ஒய்வுதான். ஆம், அந்த ஓய்வுக் கிடையில் தன் நினைவு வரப்பெற்ற செல்லம்மாள் கண்ணேத் திறந்தாள். ஏதோ ஒரு பெருஞ்சுமையை இறக்கிவிட்ட வள் போல் காணப்பட்ட்ாள். பக்கத்தில் உள்ள பச்சிளங் குழந்தை ' குவா குவா’ என்று அழும் ஒலி அவள் காதில் விழுந்தது. பையன் என்று பக்கத்தில் உள்ளவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/12&oldid=580065" இலிருந்து மீள்விக்கப்பட்டது