உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 துன்பச் சுழல்

அமர்க்களப்படும். இல்லதும் பொல்லதுமாகப் பல கட்டுக் கதைகளும் கிளம்பும். அதுவும் ஏழைகளைப் பற்றியதாக இருந்தால் சொல்லவேண்டியதில்லை. வெறும் வாயை மெல்லு பவர்களுக்கு அவல் கிடைத்தால் கேட்கவா வேண்டும்? கணவனுக வரப் போகின்றவன் என்ற காரணத்தால் பேதைப் பெண் கருத்தழிந்த கதை அவ்வூரார் வாய்க்கு நல்ல பேச்சாயிற்று. அவர்கள் பேச்சுக்கள் செல்லம்மாளேச் சுட்டெரித்தன. தவிர, மகப்பெறு காலமும் அண்மையில் வந்துவிட்டது. இனி அந்தக் குக்கிராமத்தில் இருப்பதால் பயனில்லை என்பதைக் கண்ட செல்லம்மாள் அந்தப் பெரிய வரின் துணைக்கொண்டு அருகில் உள்ள திருவண்ணுமலே மருந் தகத்தை நாடிச் சென்ருள். தன்னுடன் பெற்ருேர் அளித்த அந்தச் சிறு பெட்டியைக் கொண்டு செல்ல அவள் மறக்க வில்லை. ஐந்து கல் தொலைவும் கடந்தாள். ஒரு கட்டை வண்டி அவளுக்குத் துணைசெய்தது. பெரியவர் ஊரார் வசவுக்கு அஞ்சி ஊர்க் கோடியிலேயே கின்றுவிட்டார். அவர்தான் அந்தக் கட்டைவண்டியில் அவளை ஏற்றி அனுப் பினர். வழியில் வண்டிக்காரன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போதும் போதும் என்ருகிவிட்டது அவ ளுக்கு. நல்லவேளே, அந்த வண்டிக்காரன் சற்று வயதான வகை இருந்தான்; செல்லம்மாள் நிலைகண்டு உண்மையி லேயே அவனும் வருந்தினன். எப்படியோ பொழுது விடி வதற்கும், அண்ணுமலை வந்து சேர்வதற்கும் சரியாக இருக் தது. வண்டியிலிருந்து இறங்கி, தட்டுத் தடுமாறிப் பிள் ளேப் பெறுதலைக் கவனிக்கும் பெரிய கிறித்தவ மருந்தகத்தின்

வாயிலுக்கு முன் வந்துவிட்டாள் செல்லம்மாள். -

மருத்துவசாலையின் பெரிய மருத்துவர் அப்போது தான் நோயாளிகளைப் பார்வை யிட்டுவிட்டு, வாயிலண்டை வந்தார். இந்தத் துவுண்ட செல்லம்மாளேக் கண்டதும் அவருக்கும் பரிவு உண்டாயிற்று. மருத்துவர்கள் பரிவுக் குணம் காட்ட வேண்டியவர்கள்தானே. ஆனல் சென்னை யில் வாழ்கின்ற மருத்துவரில் சிலர் உயிரினும் பணத்தை ஒம்புகின்றவர்கள்தாம். அவர்களிடம் பரிவை விலைகொடுத்து வாங்க முடியாது. நாள்தோறும் பல ஏழைக் கிராம மக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/11&oldid=580064" இலிருந்து மீள்விக்கப்பட்டது