பக்கம்:துன்பச் சுழல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலிலே பிறந்தான் 9

கண்ட பெற்ருேர் தன்னே வடநாட்டுக்கு அனுப்பிவிட்டார் கள் என்றும் எழுதி இருந்தான். செல்லம்மாளைத் தேற்றி முழுவதும் படிக்கக் கேட்டாள். பையன் நல்லவன், என் றேனும் வந்து மணம் செய்து கொள்ளுவான்’ என்று எண் னிய கிழவியின் உள்ளம் நூறு சுக்கலாய் நொறுங்கிற்று. அன்று படுக்கையில் வீழ்ந்தவள் மறுபடியும் எழுந்திருக் கவேயில்லை. அவள் உள்ளத்தைச் செல்ல்ம்மாளேப் பற்றிய கவலேயே பெரிதாக வாட்டிற்று.

நாள் கமக்கென நிற்பதில்லை யல்லவா! நாள் நாளாக, திங்கள் திங்களாகத் தேய்ந்துகொண்டே வந்தது காலம். கிழவி தன் முடிவு நாளே எண்ணிக்கொண்டே இருந்தாள். செல்லம்மாள் வயிற்றிலுள்ள சிறு கருவும் வளரத் தொடங் கிற்று. அவளது பத்தாங் திங்கள் தொடக்கமும், கிழவி யின் இறுதி யாத்திரையும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் நடந்தன. நிறை கருக்கொண்ட செல்லம்மாள் கிழவிக்குச் செய்யவேண்டிய சடங்கையெல்லாம் செய்து முடித்தாள். ஊரில் பலர் பலவாறு அவளைப் பழித்துரைத்தாலும், ஒரு பெரியவர்மட்டும் அவள்மீது இரக்கங் காட்டி அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். ஊரார் பலவாறு அவளே ஏசினர்கள். பாவம் அந்த ஊருக்கு அவள் மிகுந்த செல் வத்துக் குரியவள் என்பது தெரியாது. அவளும் தான் தன் தந்தை எழுதிவைத்த அத்தனே செல்வங்களேயும் மதிப் பிட்டா வைத்திருக்கிருள். ஏதோ தந்தையின் உயில் அத்தை பிடம் இருந்ததால் அதன் மூலம் தனக்குச் சிறிது பொருள் வர வாய்ப்பு உண்டு என்ற ஒன்றுதான் அவளுக்குத் தெரியும். அவள் மேலும் அவ்வூரில் தங்க விரும்பவில்லை. சிறு கிரா மத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் வம்பளப்பதிலேயே காலத்தைக் கழிப்பார்கள். அவர்கள் உண்டு, அவர்கள் வேலே உண்டு என்று போவது கிடையாது. ஊர் முழு திலும் என்னென்ன நடக்கின்றது என்று கணக்கிட்டு, அவைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். சென்னை யில் ஒரே வீட்டில் குடியிருக்கும் இருவருக்குள் ஒருவர் குடிலில் நடப்பது மற்ருெருவருக்குத் தெரியாது. ஆனல் சிறு கிராமங்களில் ஊர் முழுதும் ஒரு சிறு செயலுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/10&oldid=580063" இலிருந்து மீள்விக்கப்பட்டது