பக்கம்:துன்பச் சுழல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 துன்பச் சுழல்

வீட்டிலும் பெண்கள் எங்கே உரிமை தரப்பட்டுள்ளார்கள். யாரோ ஒருவர் இருவர் உயர்ந்த பதவியில் உள்ளதைக் கொண்டே நாடு திருந்திவிட்டது என்று சொல்லலாமா? செல்லம்மாள் வேதனை பெருகிற்று. அவளே மணம் புரிய வந்த அந்தத் தலைவன் அவள் இருந்த திசை நோக்கிப் பார்க்கவில்லே. ஆனல் அவன்மேல் குற்றமில்லே என்பதை அப்பேதைப் பெண் எவ்வாறு அறிவாள்? அவள் அத்தைக் குத்தான் என்ன தெரியும்? அவனுடைய பெற்ருேர்கள் செல் ஆலம்மாளின் கிலே அறிந்த பின்-அது தம்மகளுல் வந்ததென அறிந்த பின்னும்-அவளேத் தங்கள் மகனுககுக் கொள்ள கினேக்கவில்லை. அவன் எவ்வளவோ மன்ருடின்ை. தானே அதற்குக் காரணம் என்பதை எடுத்துக் காட்டியும் பெற்ருேர் அவனே மேலும் மேலும் கடிந்தார்களே ஒழிய, அவளைக் கலியாணம் செய்துகொள்ள விடவில்லை. மற்றும் அவனே வடநாட்டுச் சாந்திநிகேதனத்தில் படிக்க உடனே அனுப்பி விட்டார்கள். என்ன செய்வான் இளைஞன். சீர்திருத்தக் காரன் தான்; செல்வனும் கூடத்தான். என்ன செய்ய முடிந்தது? பெற்ருேர் சொல்லைத்தட்டி நடக்கமுடியவில்லை என்ருலும், அப்படிப் புறப்படும்போது செல்லம்மாளுக்கும் அவள் அத்தைக்கும் ஒரு கடிதம் எழுதிவிட்டுச் சென்ருன். ஆனல் அவன் அறியான், அதுவே அத்தை உயிருக்கு உலே வைக்கும் என்பதை.

விரைந்து செல்லும் கல்கத்தா மெயிலில் இளைஞன் வாடி வதங்கி வாழ்விழந்து செல்கின்ருன். அதே நிலையில் அந்தக் குக்கிராமத்தில் தபால்காரன் ஒரு கடிதத்தைச் செல்லம்மாள் கையில் கொடுத்து விட்டுச் செல்கின்ருன். அன்று அத்தையிடம் கடிதம் வந்திருப்பதாகச் சொன்னுள் செல்லம்மாள். அவள் உத்திரவுப்படியே கடிதத்தைப் பிரித்துப் படித்தாள். அவளால் தொடர்ந்து கடிதத்தைப் படிக்க முடியவில்லை. கண்ணிர் விட்டாள். கோவென்று கதறினள். அத்தைக்கும் ஒருவாறு செய்தி விளங்கிவிட்டது. அவன் அக்கடிதத்தில் தான் எவ்வளவு முயன்றும் செல்லம் மாளே மணக்கப் பெற்றவர்கள் இசையவில்லை என்றும், தன் னேத் தூரத்தே அனுப்பிலைன்றி வேறு வழியில்லே யென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/9&oldid=580062" இலிருந்து மீள்விக்கப்பட்டது