பக்கம்:துன்பச் சுழல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலிலே பிறந்தான் 7

இருவருக்கும் மகிழ்ச்சிதான். அவனே நேரில்கண்ட செல்லம்மாள் தன்வசம் இழந்தாள். ஒடிஆடி அவனுக்குப் பணிவிடை செய்தாள். இரண்டொரு நாள் தங்கின்ை. பிறகு மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்னே சென்ருன்.

திருமணம் நடப்பதற்குள்ளாகவே அவர்கள் காதல் முற்றிக் கனியத் தொடங்கிற்று. அவனும் அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தான். புகைப்படங்கள் எடுத்தான்; போற்றினன். பாவிப் பேதைப்பெண் தன் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் அவனுக்கு ஒப்படைத்தாள். அவ. னும் சிறிதும் களங்கமில்லாதவன்தான். கலியாணம் செய்து கொள்ளப் போகும் காரிகையிடம் முன் கூட்டிப் பெறும் இன்பம் தமிழ் மரபுக்கு ஏற்றதுதானே என எண்ணினன். தமிழ் இலக்கியங்கள் படித்தவன் அவன். ஆகவே கற். பெனப் படுவது களவின் வழித்தே என்ற வகையில் காதல் வாழ்வைத் தொடங்கினன். செல்லம்மாள் கருவுற்ருள். அவள் காதலன் அவளை எப்படியும் இரண்டொரு திங்களில் மணப்பேன் என்று உறுதிகூறி இருந்தான். அந்த எண்ணத். தில் அவள் தன்னையும் மறந்திருந்தாள். ஆனல் நாளேற. ஏற அவள் எண்ணம் தளர்ந்தது; உடலும் தளர்ந்தது. மாற்றம் அறிந்த அத்தை திடுக்கிட்டாள். உண்மை உணர்க் தாள். செல்லம்மாள் பெற்ற வசவு எல்லேக்கடங்காது. அவளேப்பழித்த அதே கிழவிக்கு அந்த இளைஞனைப் பழிக்கத் தோன்றவில்லை. அவன் அடிக்கடி அங்குவந்தது குற்றமாகப் படவில்லே அவளுக்கு. ஆனல் அவன்முன் செல்லம்மாள் ஒடி.ஆடிப் பணிசெய்தது குற்றமாகப்பட்டது. வந்தவன் மயக்கமுற்றதைப் பற்றிய கவலை இல்லை. அவளுக்கு. அவனே மயக்கிவிட்டாள் என்ற குற்றம் சாற்றப்பட்டாள் செல்லம் மாள். ஆம், ஆண் எப்படிவேண்டுமானலும் கொடுமை இழைக்கலாம். பெண்கள் சிறுபிழை செய்தாலும் மானக்கே டல்லவா? இருபதாம் நூற்ருண்டின் இடையில் நாகரிகம் பேசும் இந்த நாளிலும்கூட அது உண்மையாகத்தானே இருக்கிறது. ஏதோ பெண்களுக்குச் சமஉரிமை என்பு தெல்லாம் ஏட்டிலும் மேடையிலும் தானே. நாட்டிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/8&oldid=580061" இலிருந்து மீள்விக்கப்பட்டது