உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 துன்பச் சுழல்

குட்டிற்று சமூகம். அவன் உண்மையில் தனியன்; தனிமைக் குணம் உடையவன்தான். எப்படி? அவன் வாழ்வில் புகுந்து பார்ப்போம்.

செல்லம்மாள் ஏழைக் குடியில் பிறந்தவளல்லள். அவளது முன்னேர் அவளுக்கென ஒதுக்கிவைத்த சொத்துக் களும் இருந்தன. அவ்ஸ் கணவகை எண்ணியவனும் அப்படி ஒன்றும் ஏழை அல்லன். நல்ல செல்வன் அல்லன யினும் வாழ்வுக்குப் போதுமான அளவு செல்வம் பெற்றவன் தான். செல்லம்மாளின் பெற்றேர்கள் அவளை இளமையி லேயே விட்டுச் சென்ருர்கள். அவள் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தாள். அந்தக் காலத்தில்தான் அவள் சாதாரணப் பள்ளிப் படிப்பைப் படித்து முடித்தாள். தமிழில் நன்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டாள். அவ ளது வளர்ச்சியில் மாறுதல் ஏற்பட்டது. கலியாணப் பருவமும் வந்துற்றது.

அவள் வாழ்ந்துவந்த இடம் ஒரு சிறு கிராமம். திருவண்ணுமலையிலிருந்து ஐந்துகல் தொலைவில் உள்ளது. அங்குள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் நன்கு படித்தாள். அவளது பெற்ருேர்கள் தம் சொத்துக்களைப்பற்றி எழுதி வைத்த உயில் சாசனம் அவளது அத்தையினிடம் தான் இருந்தது. அவள் மணப் பருவம் எய்திய காலத்தில் மணம் பேசப் பலர் வந்தனர். அவருள் அத்தை, அவளுக்குச் சொந்தமான ஒருவரது மகனைக் கணவகைத் தேர்ந்தெடுத் தாள். அவன் சென்னையில் படிக்கின்றவனம் ; செல்வனம் , அழகளும்; ஆண்மையுடையவனம். அவனேப் பற்றிக் கேள்வியுற்ருள் செல்லம்மாள். அவனையே மணக்க வேண் டும் என்றும் உறுதி செய்தாள். ஒரு நாள் திடீரென்று அவன் ஊருக்கு வருகிருன் என்று கேள்விப்பட்டாள். அவனேக் காணவேண்டுமென்று துடியாய்த் துடித்தாள். அவள் அத்தையும் அவனை வரவேற்பதற்கு நல்ல ஏற்பாடு தளச் செய்தாள். செல்லம்ம்ாள் விதவிதமான கறிவகைகள் செய்து வைத்தாள். எதிர்பார்த்தவன் வந்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/7&oldid=580060" இலிருந்து மீள்விக்கப்பட்டது