உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பச் சுழல்

I

சுழலிலே பிறந்தான்

இன்பத்தின் இடையில் மக்கள் என்றும் இலங்க விரும்புகின்றனர். ஆனல் அந்த எண்ணம் எல்லோருக்கும் எப்போதும் நிறைவேறுவதில்லை. சிலர் பிறந்தநாள் தொட்டு மறையும் நாள் வரையில் அல்லலிடையிலே அவதிப்பட்டு மாய்கின்ருர்கள், சிலர் இன்ப துன்பங்களை மாறிமாறித் துய்க்கின்றனர். ஒரு சிலர் என்றும் இன்பத்தில் இருப்பது போல் பாவனை செய்கிருர்கள். அவர் தம் வாழ்வை நன்கு ஆராய்ந்து பார்த்தால் சிற்சில சமயங்களிலாவது அவர் துன்பச் சுழலில் பட்டு உழல்கின்ருர்கள் என்பது நன்கு விளங்கும். அதைப்போன்று என்றும் துன்பத்தில் பட் டுழலும் ஒருவனுக்கும் வரண்ட பாலேவனத்திடை பாய்க் தோடி வற்றும் காட்டாறு போன்று, அங்கொன்றும் இங் கொன்றுமாக இன்பத்தேன் சுவைதரும் ; ஆனல் அளவின தாக இருக்கும். துன்பச் சுழலிலேயே துடிதுடித்து வாடும் சிலருக்கு எதிர்பாராத வகையில் இன்பச் சோலை எதிர்ப்படும். பிறந்தநாள் தொட்டுப் பெருந்துன்பச் சுழலில் பட்டுழன் றவன் தனியன். தனியன் என்ற பெயரை அவனுக்கு அவன்பெற்ருேர் வைக்கவில்லை. பெயர் சூட்டு விழா நடை பெறவில்லை. எப்படியோ அவன் யாருமற்ற அைைத என்ற காரணத்தால் தனியன்’ என்ற பெயரை அவனுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/6&oldid=580059" இலிருந்து மீள்விக்கப்பட்டது