உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

வாழ்வில் எத்தனையோ வகையில் இன்பமும் துன்பமும் ஒன்றை ஒன்றுப்ற்றிக் கலந்தே வந்து கொண்டிருக்கின்றன. காரணமறியாது ஒருவருக் கொருவர் தம்மை உளத்தால் பறிமாறிக் கொள்ளு கின்றனர். அன்பு அனைவரிடத்தும் செல்லத்தக்க ஒன்ருயினும் சிலரிடம் நம்மை அறியாமலேயே அது படர்கின்றது.

நாடு தோறும் சட்டங்களும் திட்டங்களும் நாள் தோறும் வளர்ந்து கொண்டே வந்த போதிலும், கொள்ளையும் கொலேயும் மட்டும் குறைந்த பாடில்லை. உலக மக்களுக்கிடையில் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு நீங்கி, கம் நாட்டுப் பழங்காலப் புலவர்கள்கூறுவதுபோன்று, பொருளாதார உரிமை உலகில் மலரின், அன்று ஒருவேளை கொள்ளையும் கொலேயும் நீங்கலாம். .

துன்பத்தில் சளையா உள்ளமே இறுதியில் இன்பப்படியில் காலே வைத்து ஏறும் தகுதி வாய்ந் தது. இத்தகைய வாழ்க்கைத் தத்துவங்களை அடிப் படையாகக் கொண்டு அமைந்ததே இந்த நவீனம். இந் நூலைத் தமிழன்னேயின் அடிகளுக்கு உரிமை யாக்குகின்றேன். -

சென்னே-30

தமிழ்க்கலே ಫ್ಲಿ) 1 – 8 – 1951

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/5&oldid=580058" இலிருந்து மீள்விக்கப்பட்டது