பக்கம்:துன்பச் சுழல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - துன்பச் சுழல்

பெயர் சூட்டு விழாவின் பேரால் பெரும்பணம் செலவு செய்யும் ஆரவாரம் அவனுக்கு ஏது? ஏதோ ஊரார் பெய ரிட்டார்கள். உதவாப் பிள்ளைகள் தம் வாய்க்கு வந்தபடி அவனைக் கேலி செய்வதற்காக இட்ட் பெயர் பின்னுளில் அவனுக்கு உரிமைப் பெயராகி விட்டது. நாமும் அவனே அப்பெயரிட்டே தனியன் என்று அழைப்போம்.

தனியன் அந்த இல்லத்தில் நன்கு பயின்று வளர்ந்து வந்தான். அந்த விடுதி ஊருக்கு வெளியிலே மல்ே அடி வாரத்தில் அமைந்திருந்தது. எதிரிலே இரண்டொரு சத்தி ரங்களும் இருந்தன. அவ்விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் தோற்றத்தில் மிக ஏழைகளாகவே காணப் பட்டனர். அந்த விடுதியை வைத்துப் போற்றும் அறக் காப்பாளர்கள் நல்லவர்கள். அைைதப் பிள்ளைகளை ஆதர வுடன் ஏற்றுக் கல்வி கற்பித்து இயேசு சமயத்தை ஏற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பெருவாரியாகச் செலவு செய்தார்கள். நல்ல உணவும் உடையும் மாணவர் களுக்கு அளிக்கவேண்டும் என்று முயன்ருர்கள். ஆனல் அங்குள்ள மேற்பார்வையாளர்கள் நடந்தவிதமோ வேறு வகையாக அமைந்தது. அங்கு வேலை பார்ப்பவர்களெல் ல்ாம் தத்தம்மாலியன்றவரை பொருள்களை வீட்டுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற குறிக்கோளிலேயே வேலை செய்தார்கள். அவர்கள் சம்பளம் பெறுபவர்கள். கொடுத்தவர் த ம் கொள்கை நிறைவேறினாலும், அன் றிக் கெட்டாலும் அவர்களுக்கு என்ன கவலை ? வி டு திக்கு வரும் அரிசி மூட்டைகள் அப்படியே மாயமாக மறையும். பிறபொருகளும் வந்தவழி தெரியாது மாய மாகப் போகும். அதன் பயன் ஏழை மாணவர் வேளா வேளைக்கு அரைவயிற்றுக் கஞ்சிக்கும் அல்லல் உறுவதில் வந்து முடிந்தது. ஏதோ வீட்டில்தான் வாழ வகையில்லேயே இங்காவது அமைதியோடு உண்டு, தங்கி, கற்பன கற்கலாம் என்று வந்த பல ஏழை மாணவர்கள் மனமுடைந்தனர். தனியனைப்போன்ற ஒரு சிலருக்குத்தான் கேட்பாரில்லை. ஆல்ை பெரும்பாலான ஏழை மாணவர்கட்குத் தாய் தந்தையர் உண்டே யார் இருந்தாலும் அங்கே அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/17&oldid=580070" இலிருந்து மீள்விக்கப்பட்டது