பக்கம்:துன்பச் சுழல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 துன்பச் சுழல்

கொடுமைகளுக்கு இடையில் சில ஆண்டுகளைக் கதித்துவிட் டான். வயது பத்துக்கும் மேலாயிற்று. இன்னும் இரண் டாண்டுகள் அங்கேயே இருந்து படிக்கலாம். ஆனல் அதற் குள் அவன் அவ் விடுதி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என்று கினைக்கவில்லை. .

வழக்கமாக நடைபெறும் அரைவயிற்று அல்லல் வாழ்வு கடைபெற்றுக் கொண்டு தான் வந்தது. மாணவர் உள்ளமோ துன்பத்தால் வெம்பியது. எப்படி இந்தத் துன்பத்தி ளிைன்றும் மீள்வது என்று ஒருநாள் திட்டமிட்டனர். அந்தத் தலைமைப் பணியாளரிடம் யாருக்கும் வாய்திறந்து பேசவும் கடுக்கம். எனவே அவர்களில் யார் இந்தக் குறையை நேரில் கேட்பது என்பதே பெருஞ் சோதனை யாகிவிட்டது. நேராக மேற்பார்வையாளரிடம் சொல்லலா மென்ருலோ, அவர்களிடம் இச்சிறுவர்களே அண்டவிடுவதும் கிடையாது. எனவே எப்படியாவது தலைமைப் பணியாள னேக் கேட்டுவிடுவது என்றே முடிவு செய்தனர். கேட்பது யார் ? அதில் மறுபடியும் தயக்கம் உண்டாயிற்று. எனினும் கிண்ட அமைதிக்குப்பின் ஒரு முடிக்கு வந்தார்கள். ஒரு சீட்டுப்போட்டுப் பார்க்க வேண்டுமெனவும், அதில் யாருடைய பெயர் வருகிறதோ, அவனே கேட்கவேண்டு மெனவும் கண்ட முடிவினை அனைவரும் ஏற்றுக் கொண் டார்கள். எல்லா மாணவர் பெயர்களேயும் எழுதிக் குலுக் கிப் போட்டார்கள். அதில் ஒரு சீட்டை எடுக்கவேண்டும். அதில் எவன் பெயர் இருக்கிறதோ அவனே தலைமைப் பணியாளனேக் கண்டு குறையைக் கூறவேண்டும் என்ற முடிவின்படி சீட்டு எடுக்கப்பட்டது. அது இத் தனியன் பெயர் குறிக்கப்பட்டதாக இருந்தது. அறிந்த தனியன் அலறினன். செய்வதறியாது திகைத்தான். எப்போதும் அவனேக் கேலிசெய்யும் மற்றைய மாணவர்கள் இப்போது அவனைச் சும்மா இருக்க விடுவார்களா? அவனே வற்புறுத்தி ஞர்கள். திடமான எண்ணத்துக்குப்பின் அவனும் சென்று கேட்பதாக முடிவு செய்தான்.

எரிமலை வெடித்தது. இதுவரையும் தன்னே யாரும் எதுவும் கேட்டறியாத அந்தக் தலைமைப் பணியாளரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/19&oldid=580072" இலிருந்து மீள்விக்கப்பட்டது