பக்கம்:துன்பச் சுழல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 துன்பச் சுழல்

காண ஒவ்வொரு மடத்திலும் திரள் திரளாக மக்கள் தங்க ஆரம்பித்தனர். திருவண்ணுமலே முழுவதும் ஒரே மக்கட் கூட்டம். அந்தக் கூட்டத்தே ஆரவார்ம் மிக்குக் காணப் பட்டது. வீடுதேடிவரும் ஏழைமக்களுக்கு உணவிடாத பெருஞ் செல்வரெல்லாம் அண்ணுமலையார் அடியிணைக்கீழ் ஆயிரம் ஆயிரமாகப் பரதேசிகளுக்குச் சோறிட வந்திருந் தனர். தம்தம் வீட்டைச் சீர்திருத்த முடியாத செல்வர் களெல்லாம் நாட்டையும் குலத்தையும் சீர்திருத்தப் போகி ருேம் என்று கூட்டம்கூட வந்திருந்தார்கள். அவர்கள் ஆரவாரம் ஆண்டவன் காதில் விழுந்ததோ என்னவோ, கற்றிப் பலகல் தொலைவு வரை கேட்டது ஆரவாரத்துக்கு இடையிலே அந்த அமைதிப் பணி நடந்து கொண்டேதான் இருந்தது. ஏழை மாணவர் இல்லம் தன்தொண்டினைச் செய்து கொண்டேதான் இருந்தது. வருவோர் போவோர்க் கெல்லாம் நீரும், மோரும் சேர்ந்து வழங்கிக் கொண்டே இருந்தது அந்த விடுதி. அதற்கிடையில்தான் நாள்தோறும் கனியன் நூறு குடம் தண்ணிரைக் கிணற்றிலிருந்து எடுத்துக்கொண்டிருந்தான். அந்தத் தண்ணிர் ஆண்டவன் திருப்பணிக்குச் செல்லும் திருநந்தவனத்துக்குச் சென்று கொண்டிருந்தது. கிறித்தவ விடுதியானலும் அந்த கிணற் றிலிறைக்கும் நீரெல்லாம் பக்கத்தில் உள்ள கோயில் நந்த வனத்தில் தான் போய்ச் சேரும். இப்படியே நாள்தோறும் விழா நடைபெற்று வந்தது.

விழாக் காணவந்திருந்தவர்களுள் காஞ்சிபுரம் பொன் னப்பரும் ஒருவர். அவர் ஆண்டுதோறும் திருவிழா ஆரவாரங்களை யெல்லாம் கண்டு கண்டு கண்குளிரச் செல்கின்றவர்தாம். இந்த ஆண்டு அவர் வந்திருந்த முறையே ஒருதனி. அவருடன் நான்கைந்து நண்பர்கள் ; இந்த விடுதிக்கு எதிரில்தான் அவர்கள் தங்கிய அந்த வேளாளர் மடம் இருந்தது. வந்த நண்பர்களுடன் பொன் னப்பர் நாள்தோறும் மடத்துத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பொழுது போக்குவர். இந்த ஆண்டில் அவரும் அவர் நண்பர்களுய் வெள்ளித்தேரைப் பார்ப்பதற்கென்றே வந்திருந்தார்கள். அவர்கள் ஊரிலும் இந்த மாதிரி ஒரு வெள்ளித்தேர் கட்ட ஏற்பாடு செய்தார்கள். அதற்கென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/20&oldid=580073" இலிருந்து மீள்விக்கப்பட்டது