உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலிலே பிறந்தான் 19

வாயிலிருந்து கடுஞ்சொற்கள் வெளிவந்தன. இந்த அனதைப் பயலுக்கா இவ்வளவு கர்வம் என்று பொங் கின்ை அவன். எத்தனையோ பெரிய பெரிய பிள்ளை களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி மெளனியாகிக் காலம் கழித்துவிட்டுச் செல்ல, இவனுக்குமட்டும் என்ன இவ் வளவு திமிர் என்று ஏசின்ை. ஒருவிதப் பற்றுமற்ற, உற்றவர் எவருமற்ற இந்தச் சிறிய பையணு என்னே எதிர்த் துக் கேட்பவன் என்று சீறின்ை. அச்சீற்றத்தின் ஈற்றில், எதிர்த்த தனியனுக்கு ஏற்ற தண்டனே கொடுக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. வரப்போகின்ற கார்த்தி கைத் திருவிழாவில் நாள்தோறும் அவன் மலை அடி வாரத்தில் ஆழமான கிணற்றிலிருந்து நூறு தோண்டி தண்ணிர் எடுத்து வெளியே கொட்டவேண்டு மென்றும், அந்தப் பத்து நாட்களிலும் அவனுக்கு ஒரு வேளை சோறு தான் அளிக்கப்படும் என்றும் அந்தத் தலைமைப் பணியாளர் தண்டனையைத் தீட்டினர். மனம் ஒடித்து மாழ்கினன் தனியன். உடன் இருந்த மற்ற மாணவர்களெல்லாம் உளம் உலர்ந்து, சோம்பி, வாடி, ஒடி ஒளித்தனர். நாட்கள் சில ஓடின. அந்தத் திருவிழா காளும் வந்தது. திருவண்ணமலை கார்த்திகைக் திருவிழா என்ருல் சொல்லவேண்டியதில்லை. சுற்றுப்புறங்களில் உள்ள செல்வர்களுக்கெல்லாம் ஒரு பெரிய வேடிக்கைதான். வெள்ளி வாகனங்களுக்குக் குறை வில்லை. கள்ளர்களும் தான் அத் திருவிழாவில் வாழ்ந் தார்கள்.

திருவிழா தொடங்கி விட்டது பல ஆயிரக்கணக் கான மக்கள் நாட்டின் நாற்பக்கங்களிலிருந்தும் திரள் திரளாக வந்து குவியத் தொடங்கினர். அந்த ஊரில் சாதிக்கு ஒரு தங்குமிடம் , குலத்துக்கொரு கூட்டம் போட ஏற்பாடு; இந்நாட்டில் உள்ள சாதியைக் கணக்கிட விரும் பினுல் நேரே திருவண்ணுமலைக்குச் சென்று அங்குள்ள மடங்களை எண்ணிவிட்டால் போதும். அடடா! முதலியார் மடமென்ருல் அதில் தென்பாதி, வடபாதி; வன்னியர் மட மென்ருல் அதில் மேல்நாடு, கீழ்காடு; இன்னும் இப்படியே எத்தனையோ வகைகள் அண்ணுமலையார் காட்சியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/21&oldid=580074" இலிருந்து மீள்விக்கப்பட்டது