பக்கம்:துன்பச் சுழல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலிலே பிறந்தான் 21

அமைந்த அந்த குழுவார்தாம் பொன்னப்பருடன் கலக் துறைந்தவர். அவர்கள் அணணுமலேயார் தேரினேக் கண்டு அதற்கும் ஒருபடி மேலாக எல்லாவிதத்திலும் சிறப்பாகக் கட்டவில்லையானுல் தாங்கள் அந்த ஊரில் எதற்கு வாழ்வது என்று பேசிக்கொண்டது தெருவிலே போனவர்கள் காது களுக்குக் கேளாமல் இல்லை. இப்படியே நாள்தோறும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பொன்னப்பர் மட்டும் அடிக்கடி விடுதியின் வாசலில் எதிரில் உள்ள கிணற்றில் அந்தச் சிறுவன் தண்ணிர் எடுப்பதை நாள் தோறும் கண்டுகொண்டே வந்தார். அத்தனே ஆழத் திலிருந்து அவ்வளவு தண்ணிரையும் இந்தச் சக்தியற்ற சிறுவன் ஏன் எடுக்கிருன் என்ற கேள்விக்கு அவரால் பதில் காணமுடியவில்லை. ஒருவேளை தோட்ட வேலைக் காரனது மகனக இருக்கலாமோ என எண்ணினர். அதுவும் அவருக்குச் சரியெனத் தெரியவில்லே. ஒன்றிரண்டு நாட்கள் கவனித்தார். அது கார்த்திகைக் திங்கள் அல்லவா? ஒரு நாள் திடீரெனப் பெருமழை பெய்தது. ஆனல் அதற்கு அடுத்த நாட்காலையிலும் அச்சிறுவன் கிணற்றிலிருந்து நீர் எடுப்பதை விடவில்லை. அவருக்கு ஐயம் உண்டாயிற்று. நல்ல வேளேயாக உடன் வந்திருந்தவர் யாவரும் எங்கேயோ தனித் தனி வேலையாக வெளியே சென்றிருந்தார்கள். அவர் மெள்ள அந்தக் கிணற்றண்டைச் சென்ருர். அந்தப் பையனது வாடிய நிலை கண்டு வருத்தமுற்ருர். அவன் தள்ளாடித் தள்ளாடி நூருவது குடத்தை இழுத்துக் கொண்டிருத்தான். அவர் அருகில் சென்று அவன் வாடிய முகத்தைக் கண்டு 'ஏன் அப்பா இப்படிச் செய்கிருய் ? இரவுதான் மழை பெய்ததே' என்ருர். அவனல் பேச முடியவில்லை; ஒரு பெருமூச்சு; தொடர்ந்து கண்ணிருடன் கூடிய அழுகை, பொன்ன்ப்பர் சுற்றுமுற்றும் பார்த்தார். தம் ஊரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடியபோதிலும். அவர் வாட்டம் தீர்க்க நல்ல ஆலைகளோ, பிற பணிமனைகளோ அமைக்காது வெள்ளித்தேர் திருப் பணியில் உள்ளங்கொண்ட அவர் சிங்தையிலும் இரக்கம் உண்டாயிற்று. அப்பையனேக் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டே வந்து தம் மடத்தின் திண்ணேமீது உட்கார்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/22&oldid=580075" இலிருந்து மீள்விக்கப்பட்டது