உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. துன்பச் சுழல்

பையனைத் தட்டிக் கொடுத்து அவன் தண்ணிர் இறைக் கும் காரணத்தைக் கேட்டார். அவன் கோவெனக் கதறி விட்டான். பிறகு மெள்ள மெள்ள அவனிடமிருந்தே எல்லாத் தகவல்களையும் கேட்டறிந்தார். 'பையா, என் னேடு எங்கள் ஊருக்கு வந்து விடுகிருயா !” என்ருர் பொன்னப்பர். உண்மையிலேயே அவன் முகத்தைக்கண்டு அவர் உள்ளம் கசிந்தது. தமது கடைக்கும் இது போன்ற ஒரு பையன் தேவைதானே என்று எண்ணிற்று அவர் மனம். பையன் நல்லவகைத்தான் இருப்பான் என்றது அவர் சிந்தை. அத்தனையும் கருதித்தான் அவனே உடன் வருகிருயா என்று அழைத்தார். அவனது வாழ்வு ஒரு துன்பச் சுழல் என்பதை யார் அறிவர் அப்பையன் -அறியாத பேதை-அந்தத் துன்புச் சுழலிலிருந்து நீங்கி ல்ை ஏதேனும் உய்திபிறக்காதா என்று எண்ணினன். வாய் திறந்து பேசவில்லை; வருவதாகத் தலையை அசைத்தான். உடனே பொன்னப்பர் அவனேயும் அழைத்துக்கொண்டு விடுதி முதற்பணியாளரிடம் சென்று அவனைத் தன்னுடன் அனுப்புமாறும், தான் அவனே வைத்துக் காப்பாற்றி முன் னுக்குக் கொண்டுவருவதாகவும் கூறினர். அவனே எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று எண்ணிய முதற் பணியாளர் அதுவே தக்க சமயம் என்று கருதினர். எனினும் விட்டுக் கொடுக்காமல் 'அவனைப் போன்ற நல்ல பையனே' எப்படி விடமுடியும் என்ருர், நல்ல பையன் என்றதும் பொன்னப் பருக்கு அவன் மேல் இன்னும் பற்று உண்டாயிற்று. பாவம், அவர் தம் கடைக்கு வேலைக்குப் பலரை வைத்து வைத்து ஏமாந்தவர். எப்படியாவது ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான என்று பல நாட்கள் ஏங்கியவர். அப்படிப்பட்ட அவர் தனியனே விடுவாரா? எப்படியோ வேண்டி, முதற் பணியாளரிடம் இசைவு பெற்று அவனேக் காஞ்சிபுரத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்து விட்டார். முதற் பணியாள னும் 'சனியன் தொலைந்தது”, என்று ஆறுதல் அடைந்தான். விடுதி மேற்பார்வையாளர் கேட்டால் அவன், சொல்லாமல் ஓடிவிட்டான் என்று சொல்லவும் திட்டமிட்டு விட்டான். தனியன் பொன்னப்பருடன் காஞ்சிக்குப் பயணமானர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/23&oldid=580076" இலிருந்து மீள்விக்கப்பட்டது