உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II

காஞ்சி வாழ்க்கை

காஞ்சிவாழ் பொன்னப்பர் மிக நல்லவர் என்ருலும் பணம் சேர்ப்பதில் மட்டும் ஒரே குறிக்கோள் உடையவர். அவருக்கு வியாபாரங்கள் பல உண்டு. அவற்றைக் கவனித் துக் கொள்ளத்தக்க பிள்ளைகள் யாரும் இல்லை. அவருக்கு ஒரே மகள்தான் உண்டு. அவள் பள்ளிக்கூடத்தில் படித் துக் கொண்டிருந்தாள். பொன்னப்பருடைய மனைவியார் சற்று அவருக்கு மாறுபட்டவர்தான். ஏழை எளியவர்களைக் கண்டாள் உண்மையிலேயே பெர்ன்னப்பருடைய உள்ளம் இரங்கும். அவர் வாழ்க்கைத் துனேவியோ ஏழை எளிய வரைக் கண்டால் வாட்டாது விடமாட்டார். வேலைக் காரர்களெல்லாம் அந்த அம்மையார் கையில் படும்பாட்டை அவர்கள் வாயாலேதான் கேட்கவேண்டும். ஏழை மாண வர்களே வீட்டில் வைத்துக் காப்பாற்றி உணவிட்டு உதவ வேண்டும் என்பது பொன்னப்பரின் கருத்து. ஆனல் அம்மையார் அதற்குச் சற்றும் இடங்கொடுக்கமாட்டார்கள். அவர்களுக்கிருந்ததெல்லாம் தன் அண்ணன் மகன் நல்ல காயகம் கன்ருக வியாபாரத்தில் மேலோங்கி வரமாட்டான எனற எண்ணகதான கலலநாயகம தாய தருதை அறறவன. தன் தந்தையாருடன் கூடப்பிறந்த காரணத்தால் பொன்னப் பருடைய செல்வ மனைவியாரை அடுத்து அவன் அங்கேயே வாழ்ந்து வந்தான். அந்த அம்மையாருக்கும் அவனே எப்படியாவது முன்னுக்குக் கொண்டுவந்து தன் ஒரே மகளே பும் அவனுக்கு மணம் செய்துகொடுத்து எல்லாச் செல்வல்துக்கும் அவனேயே உருயவனுக்கி விடவேண்டும் என்ற ஒரே எண்ணந்தான். ஆனல் மனிதன் எண்ணியப் படிதான் எதுவும் நடப்பதில்லையே. கல்லநாயகம் எங்கோ இளமையில் தாய், தந்தையருடன் நாட்டுப்புரத்தில் இருக் தவன்தான். அத்தை வீட்டுச் சீரும் செல்வமும் சேர்ந்த பிறகு அவன் அடியோடு மாறிவிட்டான். அதுவும் காஞ்சி புரம் போன்ற நகரங்களில் வாழும் இளைஞர் மனம் மிக எளிதில் மாறக் கூடியதுதானே. அத்தை வீட்டுச் செல்வ போக்ம் அவனே அறிவற்றவனுகச் செய்தது. படிப்புக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/24&oldid=580077" இலிருந்து மீள்விக்கப்பட்டது