பக்கம்:துன்பச் சுழல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 துன்பச் சுழல்

எப்போகோ முடிவு கட்டிவிட்டான். ஏழாம் வகுப்புவரை எட்டிப்பார்த்தான். அதற்குள் அவனேப் பல பழக்கங்கள் பற்றிக்கொண்டன. பாவம் அவன்தான் என்ன செய்வான். அத்தை வீட்டுப் பணமும் அண்டை அயலார் வீட்டு நட்பும் அவனே எங்கோ பற்றிச் சென்றன. எவ்வளவு அரும்பாடு பட்டும் பொன்னப்ப்ரால் அவனேச் சீர்திருத்த முடியவில்லை. தம்மகளே அவனுக்குக் கொடுக்க விரும்பவில்லையானுலும், அவன் கெட்டுவிடுவதைப்பற்றி அவரால் வருந்தாதிருக்க முடியவில்லே. அடிக்கடி பணம் கொடுத்து அவனைக் கெடுக்கும் தன் மனேவியாரைக் கண்டித்தும் பார்த்தார். வீட்டில் அவர் அதிகாரம் சற்று குறைவுதான். எனவே அதலுைம் பயனில்லே மற்ருெரு வகையாலும் அவன் கெட்டு வந்தான். தனது வியாபாரக்கடையில் அவனே இரவில் காவல் இருக்கப் போட்டார். அதில் அவருக்கு விருப்ப மில்லைதான். என்ருலும் மனம் போனபடி இரவெல்லாம் எங்கேயாவது சுற்றித் திரிந்தவனே இப்படிக் காவல் ன்று கட்டுப்படுத்தினல் ஒரு வேளை அடங்குவான் என்று கினைத்தார். மாலையில் தாம் வரும்போது கதவைப் பூட்டிக் கொண்டு.வந்துவிடுவார். இரவு அவன் சாவியை எடுத்துக் கொண்டுபோய் வெளிக் கதவைத் திறந்து படுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏற்பாடு. சில வேளைகளில் அவன் எங் காவது சுற்றிவிட்டு அப்படியே அங்குச் சென்று படுத்துக் கொள்ளும் பழக்கமுடையவனதலால் வீட்டுக்கு வந்து சாவி எடுத்துக்கொள்ள முடியவில்லை. தனக்கென வேறு சாவி வைத்துக்கொள்வான். அவன் விருப்பம்போல் வேடிக்கை. யெல்லாம். முடித்து விட்டு, இரவில் அங்குவந்து படுத்துக் கொள்ளுவான். இவற்றையெல்லாம் அறிந்த பொன்னப்பரும் அவர் மனேவியும் மிகவும் வருந்தினர்கள். என்ருலும் மனேவியார் அவன்மீது கொண்ட அன்பின் காரணத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் மகளே அவனுக்குக் கொடுப்பதுபற்றிப் பல நாட்கள் இருவரும் வாய்ச்சண்டை, யிடுவார்கள். நல்லநாயகமோ ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இராப்பகலற்றவிட்த்தே வாழ்ந்துவந்தான்.

இப்படிப்பட்ட நிலையில்தான் பொன்னப்பர் தனியனே அழைத்துக்கொண்டு அண்ண்மலையிலிருந்து காஞ்சி வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/25&oldid=580078" இலிருந்து மீள்விக்கப்பட்டது