பக்கம்:துன்பச் சுழல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 25

சேர்ந்தார். வரும் வழியிலேயே அவளுேடு பேசிக்கொண்டு வந்ததிலிருந்து அவருக்கு அந்தப் பையன் நன்கு பிடித் திருந்தது. வீட்டுக்கு வந்ததும் தன் மனேவியிடம் புதிதாக வந்த பையனைப்பற்றி விளக்கிக் கூறி அவனைத் தன் வீட்டி லேயே வைத்துக் கொள்ள விரும்புவதையும் சொன்னர். அம்மையாருக்கு உள்ளுர விருப்பம் இல்லைதான். என்ருலும் வேலேக்கு ஆள் இல்லை என்ற காரணத்திலுைம், சிறிய பையன் தானே என்ற எண்ணத்தாலும், ஆதரவற்ற அைைதப் பிள்ளையாதலால் சொன்னதைக் கேட்டுக்கொண்டு கிடப்பான் என்ற துணிவாலும் சரி என்று தன் இசைவைத் தெரிவித்தார் அம்மையார். பையனிடமும் சற்று அன்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். பென்னப்பர் அன்பில் திளைத்த தனியனும் திறந்த உள்ளத்தோடு அவர்களிடம் கன்கு பழகினன். பல வேலைகளைச் செய்தான். இதுவரையில் விடுதியன்றி வேறிடத்தில் இல்லாத அவனுக்கு இந்த மனே வாழ்க்கை சற்று மகிழ்வை அளித்தது. என்ருலும் பாவம், அந்த ஏழைப் பையன் தனது துன்பச் சுழல் இங்கும் கல்ல காயகமாகவும் அம்மையாராகவும் உருவெடுத்து வந்திருக்கும் என எண்ண முடியுமா?

தனியனே முதல் முதல் கண்டபோதே கல்லநாயகத்துக்கு என்னவோ போன்றிருந்தது. அவனைத் தனக்கு ஒரு பகை வகைவே, அவன் கருதினன். வயதில் இளையவனுலுைம் அவனல் தனக்கு ஏதோ கொடுமை வரும் என்று எண் னினன் அவன். ஆகவே அவனே எப்படியும் அந்த வீட்டிலிருந்து ஒழிக்கவேண்டும் என்று ஒரே முடிவு செய்து கொண்டான். தன் அத்தையோடு கலந்து எப்படியும் அவனே ஒழித்து விடுவது என்று முடிவு செய்து அதற்கென வழிகளும் ஆராயத் தொடங்கிவிட்டான். ஆனல் பொன்னப் பரின் மகள் மட்டும் வந்த தனியனிடம் ஒரு தனி அன்பு காட்டிவந்தாள். அைைதப் பிள்ளையானலும் அவன் முகத் தில் கானும் ஒளியும் புன்னகையும், அசைவிலா உழைப்பும் அவளை மகிழ்வித்தன. எப்போதும் அவனிடம் பேசிக் கொண்டிருப்பதில் அவளுக்குப் பெருவிருப்பம். இரண் டொரு முறை தாய் அவளைக் கடிந்து கொண்ட போதிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/26&oldid=580079" இலிருந்து மீள்விக்கப்பட்டது