உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 துன்பச் சுழல்

கூட, அவள் அந்த வேலைக்காரப் பையனேடே விளையாடிக் கொண்டிருந்தாள். தந்தையார் தனக்கு வாங்கிவரும் தின் பண்டம் முதலியவற்றை அவனுக்குக் கொடுப்பாள். பொன்னப்பரும் அதுபற்றி மகிழ்ந்தாரே அன்றி அக்குழந் தையைக் கடிந்து கொள்ளவில்லை. ஆனல் நல்ல நாயகமும் அவன் அத்தையும் எப்படியும் தனியனே ஒழித்துவிட்டு மறுவேலே பார்ப்பதென்று முடிவு செய்து விட்டார்கள். இப்படி நல்லவர் இருவர் ஒருபுரம் பரிவு காட்ட மற்றவர் இருவர் ஒருபுறம் துன்புறுத்தக் காஞ்சியிலே தனியன் சில காலம் வாழ்வைக் கடத்தி வந்தான்.

பொன்னப்பர் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம் அவர் வியாபாரம் அப்படிப்பட்டது. மற்றும் ஊரிலுள்ள மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற பெருநோக்கம் உடையவர். எனவே பொது வேலைகளுக்காகவும் அவர் அடிக்கடி வெளியூர் செல்வார். அதனல் வீட்டில் அவர் மனேவியார்தான் எல்லாம். அவர் தம் சிறு பெண் காலையில் பள்ளிக்கூடம் சென்றுவரும். நல்லநாயகமோ எங்கேயாவது சுற்றிவிட்டு உணவு வேளைக்கு விட்டுக்கு வருவான். அவன் வரும்போது தனியன் அவன் கண்களில் படலாகாது. பட் டால் சரியான அடிகொடுப்பான். தலையில் குட்டுவான். போகும்போதும் வரும்போதும் முதுகில் அடித்துவிட்டுச் செல்வான். இவற்றையெல்லாம் அத்தை கண்டாலும் ஒன்றும் கேட்டுக் கொள்ளமாட்டாள். இரண்டொருமுறை தனியன் தான் அவனிடம் பெறும் அடி உதைகளே அந்த அம்மையா ரிடம் எடுத்துச் சொல்லியும், எங்கே குறைந்து விடுகிறது ; வாங்கிக்கொள்ளேன் கிடக்கிற உடம்பலே என்று சொன் னது அவன் உள்ளத்தைச் சுட்டது. மற்றும் எப்போது பார்த்தாலும் சிடுசிடு என்றிருக்கும் அந்த அம்மையாருடைய அந்தத் தோற்றமும் அவனே வாட்டிற்று. என்ருலும் பொன்னப்பரின் கருண தோய்ந்த முகமும், அவர் மகளின் அன்புச் சொற்களுமே அவனது துன்பச் சுழலை மறக்கச் செய்தன எப்படியோ வாழ்ந்து வந்தான்.

பொன்னப்பருக்கு, நல்லநாயகம் செய்யும் கொடுமை களும், அவன் கடையில் தங்காமல் ஊர் திரியும் ஏமாற்றமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/27&oldid=580080" இலிருந்து மீள்விக்கப்பட்டது