உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 27

நன்கு விளங்கிவிட்டன. அவனே வீட்டை விட்டுப் போகச் சொல்லி விடலாமா என்று கூடச் சில சமயங்களில் அவர் கினைப்பதுண்டு. ஆனல் வீட்டு அம்மையார் ஆணேயை மறுக்க அவருக்குத் தைரியம் கிடையாது. ஒன்றுமட்டும் உறுதி செய்துவிட்டார். தன் மகளே அவனுக்குக் கொடுப் பதில்லை என்பதே அது. மற்றும் கடையில் அவனே மட்டும் தனியாகப் படுக்கவைக்க வேண்டாமென்றும், தனியனேயும் உடன் அனுப்பலாம் என்றும் திட்டமிட்டார். அத்திட்டத் தின்படியே பகலில் வீட்டு வேலைகள் ஆனதும் இரவில்' தனியன் கடையில் படுத்துக்கொள்ள ஆரம்பித்தான். கடைக்கு இரவு எட்டரை மணிக்கெல்லாம் சென்றுவிடுவான். அங்கு பத்து அல்லது பத்தரை மணி வரையில் ஏதாவது படித்துக்கொண்டிருப்பான். பொன்னப்பர் அவன் படிப் பதற்காகச் சில நூல்கள். வாங்கிக் கொடுத்திருந்தார். மற்றும் அவர் மகள் வேறு தம் பாடசாலை நூல் நிலையத்திலிருந்து நல்ல கதை நூல்களைக் கொண்டுவந்து கொடுப்பாள். அவற்றையெல்லாம் அவன் படித்துக் கொண்டிருந்து பெரும் பாலும் பதினெரு மணிக்குப் படுத்துக் கொள்வான். சில நாட்களில் அதற்குள் நல்லநாயகமும் ஊரையெல்லாம் சுற்றி விட்டு வந்துவிடுவான். -

ஒருநாள் பொன்னப்பர் வெளியூருக்குச் சென்றிருந்த சமயத்தில் நல்லநாயகம் எல்லேமீறித் தனியனே அடித்து விட்டான். அவன் ஏழையானலும்-அனதையானலும் உணர்வு கூட அற்ற மரக்கட்டையா என்ன ? அவனுக்குக் கோபம் வந்தது. எனினும் எதிரில் நின்றிருந்த அந்த அம்மாவின் கொடிய முகத்தைக் கண்டு தலைகுனிந்து ஒன்றும் சொல்லாது உள்ளே சென்றுவிட்டான். என்ருலும் அவன் உள்ளம் கொதித்துக் கொண்டுதான் இருந்தது. எப்படி யாவது நல்லநாயகத்தைப் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று உறுதிசெய்து கொண்டான். அதனல் எது வந்தாலும் வரட்டும் என்று அஞ்சாது தன் செயலே ஆற்றத் திட்ட மிட்டுக் கொண்டான். வெளியூர் சென்ற பொன்னப்பர் மாலை வீடு திரும்பினர். வீட்டு வேலைகளெல்லாம் முறைப் படியே நடந்தேறின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/28&oldid=580081" இலிருந்து மீள்விக்கப்பட்டது