உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 29

திறக்கப் பலர் வற்புறுத்தினர். தனியன் நல்லநாயகம் தீங்கிழைப்பான் என்று கூறியும் அருகிருந்தவர் தாங்கள் பார்த்துக் கொள்வதாகச் சொல்லவே கதவைத் திறந்தான். அதுவரை சற்றுத் தொலைவிலிருந்த நல்லநாயகம் தாண்டி இடித்துக்கொண்டு வந்து அவனே ஓங்கி அடிக்கப்போன்ை. அருகிலேயே யிருந்தவர்கள் தடுத்தார்கள். அவன் எதற்கும் கட்டுப்படவில்லை. வாயில் வந்தவாறெல்லாம் திட்டின்ை. ஒரு அடியும் அடித்தான். அத்தனையும் பொறுத்துக் கொண்டு அமைதியான முகத்தோடு இருந்தான் தனியன். அருகிருந்து வர்கள் நல்லநாயகத்தை எவ்வளவோ அடக்கினர். அவன் வாய் அடங்கவேயில்லே, ஏதேதோ பேசினன். ஊர் பேரற்ற அைைத. எவளோ எவனுக்கோ பெற்று எங்கோ போட்டு விட்டுப்போன வேசி மகன்’ என்று எல்லா ஆத்திரமும் கொட்டக் கொக்கரித்தான் அவன். அது வரையில் பொறுமையோடு இருந்த தனியன் முகம் சிவந்தது. தன்னைப் பற்றி என்னகுறை கூறிலுைம் பொறுத்துக்கொண்டு தான் இருந்தான். ஆனல் தன் தாயைப்பற்றி-மறைந்த அன்னையைப்பற்றி-தானே அறியாத தன் அன்னையைப் பற்றி நல்லநாயகம் பேசிய அந்தச் சுடு சொற்கள் அவன் உள்ளத்தைத் தொட்டன. ஓவென்று கூச்சலிட்டான். அது வரையில் இல்லாத ஓர் உணர்வு அவனே ஆட்டிவைத்தது. துள்ளிக்குதித்தான்; தாண்டின்ை. கல்லநாயகத்துக்கு எதிரில் சென்ருன்; அப்படியே அவன் கன்னத்தில் எட்டி ஓங்கி ஒர் அறிைவிட்டுத் திரும்பி ஒடினன். எங்கும் நிற்கவில்ல்ை நேரே பொன்னப்பர் வீ ட்டுக் குச் சென்ருன். நல்லநாயகமும் அ வனே த் தொடர்ந்து ஒட ஆரம்பித்தான். என்ருலும் சண்டையை முற்றவிடலாகாது என்று அருகிலிருந்தவர். அவனைப் பிடித்துக் கொண்டார்கள்; அனேவரும் பொன் னப்பர் வீட்டுக்கு வந்தார்கள். தனியன் அவர்கள் வருவதைக் கண்டு அஞ்சி ஒரு அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான். அனைவரும் வீடு வந்தார்கள். வீட்டு அம்மை யாரும் தம் செல்வன் நல்லநாயகம் அடியுண்டதை எண்ணித் தனியனை வாயார் வைதாள். அவனே வெளியே வரும்படி அழைத்தாள். அவன் எதற்கும் வெளியே தலே காட்டவில்லை. அதற்குள் வேறு வேலையாக வெளியே சென்றிருந்த பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/30&oldid=580083" இலிருந்து மீள்விக்கப்பட்டது