பக்கம்:துன்பச் சுழல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 துன்பச் சுழல்

னப்பர் வீடு திரும்பினர். வீட்டில் கூட்டம் கூடியிருப் பதையும், அக்கூட்டத்தின் காரணத்தையும் அறிந்தார். தானே அந்த அறையின் அருகில் சென்று தனியனே வருக என்று அழைத்தார். பொன்னப்பர் வந்துவிட்டார், தனக்குக் கவலையில்லே என்று கருதினவனுய்த் தனியன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். எதிரே தனியனைக் கண்டதும் நல்லநாயகத்துக்குச் சீற்றம் மிக்கது. என்ருலும் பொன்னப்பரின் முன் ஒன்றும் செய்ய இயலாமல் அப்படியே அசைவற்று இருந்தான். பொன்னப்பர் அனே வரையும் இருக்கச் சொல்லிவிட்டு, தனியனே அருகே அழைத்து நடந்ததைக் கூறச் சொன்னர். அவன் வந்த நாள் தொடங்கி நடந்தவற்றை யெல்லாம் விடாது கூறினன். அன்று தொட்டு. நல்லநாயகத்தாலும், அவன் அத்தையாலும் நாள்தோறும் அவன் சிறுமை அடைவதையெல்லாம் எடுத்துச் சொன்னன். அவன் எவ்வாறு பொறுத்து அவை யெல்லா வற்றையும் ஏற்று வந்தான் என்பது பற்றியும், அன்று தன் தாயினைப் பழிக்கவே தான் அவனே அடிக்க நேர்ந்தது என்பது பற்றியும் விளக்கி உரைத்தான். எல்லாவற்றையும் கேட்ட பொன்னப்பர் தனியன்மேல் இரக்கங்கொண்டார். என்ருலும் அடித்தது தப்பு என்று மேலாகக் கண்டித்தார். நல்லநாயகத்தையும் கண்டித்து இனி ஒருவரோடொருவர் பேசவும் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள். அனைவரும் சென்றுவிட்டார்கள். அன்று முதல் தனியன் கடையில் சென்று படுக்கவேண்டும் என்ற முறையும் இல்லை.

தனியின் தனிமையில் பலப்பல எண்ணினன். பிறந்த நாள் தொட்டுத் தொடர்ந்துவரும் துன்பச் சுழலை நினைத் தான். தன் தாய் தந்தையரைப் பற்றி ஒன்றும் தெரிய வில்லையே என்று சிங்தை கொங்தான். அன்றைப் பொழுது கழிந்துகொண்டே வந்தது. பொன்னப்பர் வீட்டில் இல்லாத போதெல்லாம் அவர் மனேவியார் அவனேப் பழித்துரைக்கும் ஏச்சும் பேச்சும் அவனே மேன்மேலும் வருத்தின. இன்னும் தொடர்ந்து இருந்தால் அங்கு என்னென்ன கொடுமைகளை ஏற்க நேருமோ என்று எண்ணிற்று அவன் ஏழையுள்ளம், மாலை வரையில் தன் வேலைகளையெல்லாம் ஒரு குறைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/31&oldid=580084" இலிருந்து மீள்விக்கப்பட்டது