பக்கம்:துன்பச் சுழல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 31

மில்லாது செய்து கொண்டேதான் வந்தான். என்ருலும் உள்ளத்தில் ஏதோ ஒரு எண்ணம். உறுத்திக்கொண்டே தான் இருந்தது. அன்றைக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று முயன்ருன் இரவும் வந்தது. அவன் முடிவும் அவனுக்கு நன்கு புலயிைற்று.

அன்றைக்கு அவன் கடைக்குச் செல்லவேண்டியதில்லை. வீட்டிலேயே படுத்துக்கொள்ள வேண்டும். எப்படியும் அன்று இரவு அவன் அவ்வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று முடிவு செய்துவிட்டான். எனவே அவன் தனது படுக்கையை வெளித் தாழ்வாரத்தில் போட்டுக் கொண்டான். பொன்னப்பர் உள்ளேபடுக்கச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. இரவில் புறப்பட்டுப் போகும்போது கதவைத் திறந்துவிட்டால் யாராவது உள்ளே புகுந்தால் என்ன செய்வது என்பது அவன் எண்ணம். படுத்துக் கொண்டான். ஏதாவது கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செல்லலாமா என நினைத்தான் அவன். ஆனல் அக்கடிதத் தில் 'நல்லநாயகத்தைப் பற்றியும், அந்த அம்மையாரைப் பற்றியும் தானே குறைகள் எழுதவேண்டும். ஏன் நான் சென்ற பிறகும் அவர்கள் என்னைப்பற்றிச் சண்டையிட்டு அவர்தம் அமைதியைக் குலேக்க வழிதேடவேண்டும். ஏதோ கான் அைைதயாக வந்தேன், அப்படியே போகின்றேன் : என்று முடிவு செய்தான், ஆல்ை அதுவரையில் எங்கே செல்வது என்ற எண்ணமே இல்லே. புறப்படுவதற்குச் சற்று முன்தான் அந்த எண்ணம் உண்டாயிற்று.

சென்னையைப் பற்றிப் பலமுறை கேள்விப் பட்டிருக் கிருன் அவன். எப்படிப்பட்டவர்கள் சென்ருலும் அங்கு வேலே சம்பாதித்துக்கொண்டு, ஏதோ வயிற்றுக்குத் தேடிக் காலம் கழிக்க முடியும் என்று இரண்டொருவர் பேசியது அவன் காதில் விழுந்திருக்கிறது. எனவே, சென்னையில் தனக்கும் ஏவாவது பிழைப்புக்கிடைக்கும் என்ற நம்பிக்கை அவன் உள்ளத்தில் ஏற்பட்டது. சென்னைக்குச் செல்வதன்றி வேறு எவ்விடத்துக்கும் செல்ல வழி இல்லை என்பதை உணர்ந்தான். அப்படியே குடு இரவு கழித்துப் புறப்படவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/32&oldid=580085" இலிருந்து மீள்விக்கப்பட்டது