உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {H சென்னைக்கு வழியில்

எவ்வளவு தூரம் கடந்தான் என்பது அவனுக்குத் தெரியாது. பொழுது விடியும்போது அவன் ஒரு பேரூரில் தான் வந்திருப்பதை அறிந்தான். அங்குக் காஞ்சியில் பொழுது விடிந்ததும் பொன்னப்பர் எழுந்து தன்னேக் காணுமல் தேடு வார் என்றும், அவர் மனேவியாரும் நல்லநாயகமும் சனியன் ஒழிந்தது என மகிழ்வார்கள் என்றும் நினைத்தான். மேலும் அவர்களைப்பற்றி அவனுக்கு நினைக்க ஒன்றும் தெரிய்வில்லை. ஆம், அவர்களும் அைைத வந்தபடியே அைைதயாகப் போயிற்று என்று எண்ணியிருப்பார்கள். ஆனல் பொன் னப்பர் உள்ளம் மட்டும் சற்று வருந்தியிருக்கும். ஆனல் அவரும் அவனேக் காணவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட வில்லை. அவர் மகள் மட்டும் பல தடவை அவரைத் தனியன் எங்கே எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்தாள். பிறகு தனியன் என்ன ஆன்ை என்ருே அவன் வாழ்வு என்ன் ஆயிற்று என்ருே அவர்கள் கினேக்கவில்லை. தனியனும் தன் வரண்ட வாழ்வுக்கிடையில் மறுபடியும் அவர்களை எண்ண வில்லை. அவன் வாழ்வில் அவர்கள் குறுக்கீடு ஒரு திவலை; அவ்வளவுதான்.

பொழுது விடிந்ததும் அவனுக்குச் ச்ோர்வு உண்டா யிற்று. கடந்துவந்த இளேப்பு அவனுக்கு மேலும் சோர்வை வளர்த்தது. எங்கே போகிருேம் என்ற உணர்வு இல்லா மலேயே அவன் நடந்து கொண்டிருந்தான். பசிவேறு வாட்டத் தொடங்கிற்று. வழியில் அந்தப் பேரூரில் பல இடங்களில் சென்று சோருவது கூழாவது தர மாட்டீர்களா என்று கேட்டுப் பார்த்தான். எல்லோரும் அந்த ஊரின் கோடியிலே இருக்கின்ற ஒரு தர்ம சத்திரத்திற்குப் போகு மாறு கூறினர்கள். அவன் உண்மையிலேயே அங்கு ஒரு தர்மசத்திரம் இருக்கிறது என்றும், அங்கு போனல் கன்கு உணவு பெறலாம் என்றும் எண்ணி அந்த இடத்துக்கு

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/34&oldid=580087" இலிருந்து மீள்விக்கப்பட்டது