பக்கம்:துன்பச் சுழல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 துன்பச் சுழல்

விரைந்து சென்ருன். அந்த இடத்தைக் கண்டுபிடித்தும் விட்டான். ஆனல் அது ஒரு தரும சத்திரமல்ல; தன் போன்ற ஏழை மாணவர்கள் தங்கும் விடுதியென்று கண் டான். அங்குள்ள சுவர்களெல்லாம் அவளுேடு ஏதேதோ பேசின. பலப்பல சொல்லோவியங்கள் அவன் முன் காட்சி அளித்தன. சிறுவனல் அவ்வளவையும் படித்து அறிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ சிலவற்றைப் படித்தான். சிலவற்றைப் புரிந்து கொண்டதுபோல் தலையை ஆட்டினன். அதற்குள் பசி அவனே வாட்ட ஆரம்பித்தது. விடுதயின் உள்ளே சென்றன். அப்போது விடுதிக்கு விடுமுறை யென்றும் மாணவர்களெல்லோரும் ஊருக்குப் போயிருக் கிருர்கள் என்றும் கேட்டறிந்தான். அங்கு அப்போது காவ லாக இருந்த பெரியவர் அவனே யார் என்று கேட்டார். அவர் சற்று வயதானவராக இருந்தாலும் இள ை முடுக் கோடு இருந்தார். தன் எதிரில் கின்றிருக்க ஆட்களேயெல் லாம் சற்றுக் கடுமையாகவே வைதுகொண்டே யிருந்தார். கழுத்தில் உருத்திராக்கம் தங்கத்தோடு பொலிந்தது. உடம் பெல்லாம் திருறுே பூசிக்கொண்டிருந்தார். வாயில் டல் இல்லாவிட்டாலும், வாய்ச் சொற்கள் நன்கு வெளிவந்தன. அவர் பாவம் அந்தச் சிறுவன்மேல் இரக்கப்பட்டார். அவனைப் பற்றிக் கேட்டறிந்தார். அவனும் தன் வரலாற்றை யெல்லாம் கூறி, சென்னே செல்வதாகவும், உணவு வேண்டிய தன்னே ஊரார் அங்கு அனுப்பியதாகவும் விளக்கினன். அவர் உடனே உள்ளே சென்று அவனுக்கு வேண்டிய சாப்பாட் டைக் கொண்டுவந்து கொடுத்தார். அவன் வயிரார உண் டான். மேலும் ஒரு வேளைக்கு ஆகும்படி சோறுகூடக் கட்டிக் கொடுத்தார் அப்பெரியவர். அங்கு மாட்டியிருந்த பலகையிேைல அந்த ஊர் வாலாஜபாத் என்றும், அந்த இடம் வள்ளலார் இல்லம் என்றும் அறிந்துகொண்டான். பிறகு அவ்னுக்கு எங்கும் நிற்கத் தோன்றவில்லை. எப்படியும் விரைவில் சென்ன்ையை நோக்கிச் செல்லவேண்டும் என்ற் எண்ணமே முன்னின்றது. அந்தப் பசி வேளையில் சோறிட்ட அப்பெரியவரை வாழ்த்தினன் . உடனே அவர் கொடுத்த அந்தச் சிறு சோற்று மூட்டையையும் எடுத்துக்கொண்டு சென்னைக்குச் செல்லும் பாதைவழியிலே நடக்கப் புறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/35&oldid=580088" இலிருந்து மீள்விக்கப்பட்டது