பக்கம்:துன்பச் சுழல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக்கு வழியில் 35

பட்டான். விடுதியிலிருந்து வந்ததும், தான் முன்னே அருணேயிலிருந்து வந்ததும், ஆந்த விடுதியில் அவன் பட்ட் அல்லலும் அவதியும் எல்லாம் ம்னக் கண்முன் கின்றன. எதை எதையோ எண்ணிக் கொண்டே சென்றது அவன் மனம். கால்களோ நிமிடத்துக்கு கிமிடம் அவனுக்கும் சென்னைக்கும் உள்ள தூரத்தைக் குறைத்துக்கொண்டே வந்தன, கடந்துகொண்டே இருந்தான் சிறுவன் தனியன், தனிமையாக.

சென்னையைப் பற்றிய சிந்தனேகளுக்கு இடையிலே அவன் கடந்துகொண்டிருந்தான். சிறிது தூரம் நடப்பான். கால் வலித்தால் சிறிது கேரம் உட்காருவான். பிறகு மறு படியும் கடப்பான். இப்படியே அன்றைப் பொழுதெல்லாம் அவன் நடந்தான். கையிலோ காசில்லே. கட்டிக்கொடுத்த அந்த சோற்றை வழியில் ஓரிடத்தில் வைத்துக்கொண்டு காப்பிட்டான். மாலே நெருங்க நெருங்க அவனுக்குக் கஆள்ப்பும் சோர்வும் அதிகமாகிக் கொண்டே வந்தன. மாலை வரவர இருட்டுத் தொடங்கும் வேளையில் அவன் ஏதோ ஒரு பேரூரின் பக்கத்தில் தான் இருப்பதாக கினைத் தான். பல மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த ஊரை நோக் இத் தனக்கு முன்னும்பின்னும் நடந்து, செல்வதைக் கண் டான். பலர் இரட்டைமாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்ட மாகச் செல்வதையும் கண்டான். அவர்கள் எங்குச் செல்கிருர் கள் என்பதை அறிய விரும்பின்ை. வரவரக் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, அவன் அண்மையில் ஒரு பெரிய நகரம் இருக்கத்தான் வேண்டும் என நினைத்தான். ஒய் வாகச் சற்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். பசி வேறு அவனே வாட்டிற்று. அந்த மரத்தின் கீழ் வேறு சிலரும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைக் கேட்டு அந்த ஊர் சீபெரும்புதூர் என்றும், அன்று அங்கு உடையவருக்குச் சாற்றுமுறைத் திருவிழா என்றும், அதற்காகவே அத்தனைக் கூட்டம் நாலா பக்கங்களிலிருந்தும் வருகிறது என்றும் அறிந்து கொண்டான். கூட்டம் வரவர அதிகமாகிக் கொண்டே வந்தது. அவன் அன்று காலேயிலிருந்து பதி றுை கல் நடந்து வந்திருப்பதை அவர்கள் மூலம் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/36&oldid=580089" இலிருந்து மீள்விக்கப்பட்டது