பக்கம்:துன்பச் சுழல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - துன்பச் சுழல்

கொண்டான். அருகிலேயே இருந்த மைல் ಹನಿಹಿ) உற்றுப் பார்த்தான். அதில் இருபத்தாறு என்று குறித்திருந்தது. அருகில் இருந்தவர்கள் சென்னேக்கு இன்னும் இருபத்தாறு கல் செல்லவேண்டும் என்ருர்கள். , -

திருவிழாவென்ருல் தனக்கு ஏதாவது உணவுக்கு வகை கிடைக்குமா எனக் கேட்டான். அவர்கள் அவ்வளவு சுலபத் தில் அங்கு உணவு கிடைக்காது என்று கூறினர். என்ருலும் அங்கே பலர் ஏழைகளுக்கும், திருவிழாக் காண வருபவர் க்ளுக்கும் உணவாக்கி இலவசமாகக் கொடுக்கின்ருர்கள் என்பதை அறிந்தான். அப்படிப் பல உணவு விடுதிகள் இலவசமாக வழங்கியும் தனக்கு மட்டும் ஏன் உணவு கிடைக் காது என்று அவன் எண்ணத் தொடங்கினன். இளம் உள் ளத்துக்கு ஒன்றும் எட்டவில்லை. மேலும் அவர்களையே கேட்டான். அவர்கள் அப்போதுதான் ஏதோ ஒன்றில்ை தம் நெற்றியில் வெண்மையாகவும், சிகப்பாகவும் கோடுகள் தீட்டுவதை அறிந்தான். அப்போது சற்று இருட்டிவிட்டது. ஒரு பெட்டின்யின்மேல் ஒரு லாந்தர் எரிந்து கொண்டிருந் தது. அந்த வெளிச்சத்தில்தான் அவர்கள் காமம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அருணேயில் திருநீறு பூசிய பலரைக் கண்டிருக்கிருன். காஞ்சியில் இரண்டொரு நாமம் இட்ட வரையும் கண்டிருக்கிருன். ஆலுைம் அவற்றைப் பற்றி அவன் ஆராயவில்லை. இன்று அவர்கள். அந்த வேளையில் அப்படி காமம் தீட்டுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணிற்று அவன் உள்ளம். மெதுவாக அவர்கள்மிருந்தே எல்லாவற்றையும் கேட்டறிந்தான். அது ஒரு சிறந்த வைணவத் தலம் என்றும், அன்று அங்கு நடைபெறும் சாற்றுமுறைத் திருவிழாதான் அந்த ஊரிலேயே பெரிய தென்றும், அதை காணப் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்களென்றும், அவர்களுக்கெல்லாம் உணவு வசதி செய்யப் பல விடுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற தென்றும், அங்கே காமம் போட்டுக்கொண்டு போனல் தான் சோறு கிடைக்குமென்றும், ஆகவேதான் அவர்களெல் லாம் காமம் போட்டுக் கொள்ளுகிருர்களென்றும், அவர் க்ளெல்லாம் பழுத்த சைவர்களாயிருந்தும் காமம் போட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/37&oldid=580090" இலிருந்து மீள்விக்கப்பட்டது