பக்கம்:துன்பச் சுழல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக்கு வழியில் 37

கொண்டால்தான் சோறு உண்டு என்ற ஒரு காரணத்திற் காகவே அவ்வாறு செய்கின்ருர்களென்றும் அறிந்தான். ஆறிந்தும் அவனுக்கு அதெல்லாம் ஒன்றும் நன்கு விளங்கவிே இல்லை. ஏதோ ம்ற்றவர்கள் செய்வது போன்று தானும் செய்ய வேண்டுமே என்று அவன் காமம் போட்டுக் கொண் டானே ஒழிய அந்த நாமத்தின் தத்துவங்களே எல்லாம் அவன் உணர்மாட்டான். அவன் மட்டுமென்ன, எத்தனையோ பேர் அதன் அவசியத்தையும் காரணத்தையும் அறியாமல் தானே செய்கிருர்கள். அதிலும் அந்தப் பெரும்பூதுாருக்கு வருகின்றவர்கள் வெறும் ஒரு வேளைச் சோறுக்காகத்தானே அப்படி காமம் போடுகிரு.ர்கள். சோறுபோடுகிறவர்களுக்கு இதெல்லாம் தெரியாமலில்லை. தெரிந்த போதிலும் அவர்கள் பிற சமயத்தவர்களெல்லாம் அந்த ஒரு நாளைக்காவது நாமம் போட்டுக் கொள்கிருர்களே என்ற மகிழ்ச்சியிலே கிற்கிருர் கள். பாவம். தனியனுக்கு இவற்றை யெல்லாம். எண்ணன் நேரமும் மனமும் ஏது? நடந்து வந்த அயர்ச்சி ஒருபுறம், வயிற்றுப்பசி ஒருபுறம்; இவற்றின் இடையில் எப்படியாவது அக்த வேளைக்கு வேண்டிய உணவுபெற வேண்டும். எனவே அவனும் காமம் போட்டுக்கொண்டான்.

கன்ருக இருட்டிவிட்டது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக விழுந்தடித்துச் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடையே இனியனும் ஒரு தன்ச் சிறுவகை அங்கும் இங்கும் அலேந்து கொண்டிருந்தான். கடைசியில் எப் படியோ ஒரு சத்திரத்தைக் கண்டுபிடித்து மற்றவர்க ளோடு அவனும் ஒருவகைச் சென்று உட்கார்ந்து கொண் டான். ஆனல் அங்கு ஒருவரும் சாப்பிடவில்லே. எல் லோருக்கும் ஒவ்வொரு இலையில் தயிர்சாதத்தைக் கலந்து போட்டார்கள். அவரவர்களும் அதை வாங்கிக்கொண்டு அப்படியே குளக்கரைக்கும் கால்வாய்க் கரைக்கும் சென்றுவிட்டார்கள். அவனும் மற்றவர்களோடு குளக் கரைக்குச் சென்றுவிட்டான். சாப்பிட்டுக் கொண்டே இருவர் தன் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப் பதைக் கேட்டான். அவர்கள் இப்படிக் கடவுள் பேரால் சின்னங்கள் ஏற்படுத்தி, அதை வைத்து வயிறு பிழைக்க வழி தேடிக்கொள்ளும் இழிநிலையையும், பரந்த இறைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/38&oldid=580091" இலிருந்து மீள்விக்கப்பட்டது