உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக்கு வழியில் 39

தான். தூரத்தே கற்பூரம் கொளுத்தி உடையவருக்குத் தீப ஆர்ாதனை செய்தார்கள். மக்களின் கோவிந்தா என்ற ஒலி மற்றெல்லாவற்றைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ஆனல் அவர் தம் உள்ளங்கள்? ஏழைச் சிறுவன் உள்ளம் இதை யெல்லாம் எண்ணிற்று. அதற்குள் உடையவர். அருகில் வந்தர்ர். அவன் உள்ளமுருகினன். தாய் தந்த்ை அற்றவர்களுக்கு'ஆண்டவன்ே! தாங்களே தாய்தந்தை என் பார்களே, அது உண்மையானுல் நீயே என்னை இப்படித் திண்டாட வைப்பாயா? நான் எங்கு செல்கிறேன்; எதற் காகச் செல்கிறேன் என்பதுகூடத் தெரியாதே எனக்கு. எங்குச் சென்றுதான் என்ன செய்யப்போகிறேன்' என்று மனத்தால் முறையிட்டான். ஆல்ை ஆண்டவன் உலா நடந்து கொண்டே இருந்தது.

எல்லா வேடிக்கைகளையும் கண்ட தனியன் எப்படி யாவது விரைவில் சென்னையைச் சேர்ந்தால் ஏதாவது ஒரு வேலையைத் தேடிப் பிழைக்கலாம் என்று எண்ண மிட்டான். இன்னும் இருபத்தைந்து கல் என்று எண்ணும் போது அவன் மனம் துண்ணென்றது. அப்படியே தள்ளாடி டந்து ஊர்க் கோடியில் வந்துவிட்டான். அப் போதுதான் இளம் தம்பதிகள் இருவர் அருகிலே தம் கார் ஒட்டியை எழுப்பிக் கொண்டிருந்ததைக் கண்டான். அவர்களுக்கும் உறக்கக்கண்தான். அவர் தம் பேச்சுக்களி லிருந்து அவர்கள் சென்னே செல்பவர்கள்தான் என அறிக் தான். காருக்கு உள்ளே இடம் இருந்தது. ஆனல் அவர் கள் அந்த அைைதயை ஏற்றிக் கொள்வார்களா? சுற்று முற்றும் பார்த்தான். அனேவரும் துரக்கக் கண்ணுேடு இருந்தமையால் அவனே க் கவனிக்கவில்லை. காருக்குப் பின்னல் தனியாகச் சக்கரம் வைக்கும் இடத்தில் அந்தச் சக்கரம் நன்கு பதியவைக்கப்பட்டிருந்தது. அதன்மேல் மூட்டை ஒன்றும் இல்லை. அதில் ஏறிச் சக்கரத்தைக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டால் எப்படியும் சிறிது நேரத்தில் சென்னையை அடைந்து விடலாம் என்று சிந்தித்தான். அந்தக் கார் அவன் சிந்தனையை நீள விடவில்லை. உடனே புறப்பட ஆரம்பித்தது. தாவினன்; அருகே சென்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/40&oldid=580093" இலிருந்து மீள்விக்கப்பட்டது