பக்கம்:துன்பச் சுழல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 துன்பச் சுழல்

ஒன்றும் வெளியுலகத்தைப்பற்றி அப்போதும் அவனுக்குத் தெரியாது. எனவே இவர்கள் கண்களுக்கு அவன் அகப் படவே இல்லை. நாட்கள் திங்களாக மாறின; சில திங்களும் கழிந்தன. -

செல்வநாதர் வீட்டில் தனியன் யாதொரு குறைவுமின்றி நன்கு வளர்ந்து கொண்டிருந்தான். தன்னே ஆழ்த்திய துன்பச் சுழல் நீங்கியது என்றே மனமகிழ்ந்திருந்தான். செல்வநாதரும் அவனைத் தன் மகன் எனவே போற்றி வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவி மக்கள் ஒருவரும் இலர். அவர் ஏதோ பொதுத் தொண்டு செய்துகொண்டு அைைத விடுதி அமைத்துக் காலம் கழிக்கின்றவர். தமக்கென மக்கள் இல்லாது போயினும் பல அைைத மக்களை வைத்து காப்பாற்றுவதில் அவர் தனி மகிழ்ச்சி கொண்டார். ஆனல் ஏனே இவனே மட்டும் அைைத இல்லத்திற்கு அனுப்பாமல் தன் வீட்டிலேயெ வைத்துக்கொண்டிருந்தார். அவனும் வருத்தம் அறியாது வாழ்ந்து வந்தான். எனினும் அந்தக் கூடத்தில் மாட்டியிருந்த படத்தைப் பார்க்கும் பொழுது மட்டும் தன்னேயறியாது கலங்கினன். முன்பின் அறியாத வர் வீட்டில் மாட்டியிருக்கும் படத்தினிடம் தான் கொண்ட ஆசைக்குக் காரணத்தையும், அதுபோன்று முன்பின் அறியா செல்வநாதர் தன்னிடம் கொண்ட அன்பின் காரணத்தையும் அவனல் அறிந்துகொள்ள முடியவில்லை. நாட்கள் சென்று கொண்டேயிருந்தன. அடிக்கடி செல்வநாதருடனும் தனி யாகவும் நகரத்துக்குச் சென்று பல நலங்களேயெல்லாம் கண்டு வரத் தொடங்கினன். r

அவனுடைய துன்பச் சுழலின் விடிவெள்ளி இன்னும் வெகு துாரத்தில் இருப்பது அவனுக்குத் தெரியாது. அவன் வாழ்வில் பொருமை கொண்டோ, வேறு ஏனே ஒரு பெரியவர் அவன் மேல் குறை சொல்லத் தொடங்கினர். அப் பெரியவர் செல்வநாதருடைய நண்பர். அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தார். அவர் தனியனே பற்றி அடிக்கடி ஐயப்பட்டுக்கொண்டிருந்தார். ஒரு வேளே இந்த அனுதைக்கு இவ்வளவு செல்வ வாழ்வு ஏன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/61&oldid=580114" இலிருந்து மீள்விக்கப்பட்டது