உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் ஒரு திவலை 59

வந்த பொருள்கள் அனைத்தையும் அவன் முன் சேர்த்துக் குவித்தார்கள்; அவற்றை யெல்லாம் அவன் எடுத்து வைத் துக்கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான்; தனியனேக் காணவில்லை. அவன் எங்கே என்று அதட்டினன். ஒரு வருக்கும் சொல்ல கா எழவில்லை. எப்படியோ முயன்று அவன் காணுததைப்பற்றிச் சொல்லி விட்டார்கள். உடனே அவன் கொண்ட கோபத்திற்கு எல்லையில்லை. அந்தப் பைய் ல்ை தனது திருட்டுத் தொழிலே போய்விடும் என்றும், எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடுவான் என்றும் கதறினன். அனேவரையும் வாய்க்கு வந்தவாறு திட்டினன். அகப்பட்டவர் முதுகில் நல்ல சூடு கொடுத்தான். எல்லோ ரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். முடிவாக எப்படியும் அவனைக்கண்டு பிடித்து ஆகவேண்டு மென்றும், இல்லா விட்டால் அனைவரையும் துரத்தி விடுவதாகவும் பயமுறுத் தின்ை. அந்தச் செய்தியை இரவே சொல்லி அனுப்பாததற் காகத் தன் மகனைக் கடிந்து கொண்டான். எப்படியோ ஒரு வாறு இருந்த பிற வேலைகளையும் முடித்துவிட்டு வெளியேறி ன்ை மார்த்தாண்டன். மற்றவர்களோ, தங்களுடைய அன்ருடத் திருட்டுத் தொழிலுடன, அவனைத் தேடுவதையும் தொழிலாகக் கொண்டார்கள். முருகனும் அழகியும்கூடத் தேடுவதில் ஈடுபட்டனர். தனியன சிலருடைய உள்ளத்தை கவர்வதை போன்று அழகியின் உள்ளத்தையும் கவர்ந்தான். அவனது கள்ளமறியா உள்ளம் அழகியைக் கட்டிப் பிணித் தது. அந்தப் பையனே எப்படியாவது கண்டு பிடித்து வந்து தங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என முயன்ருள் அழகி. அவள் கருத்தைச் சரியென்று யேற்றுக் கொண் டான் முருகன். எனவே அனைவரும் தனியனேத் தேட ஆரம்பித்தனர்.

எங்கேயாவது வெளியே திரிந்து வந்தால்தானே தனியன் அகப்படுவதற்கு. அவன்தான் செல்வநாதர் வீட்டிலே செல்வமாக வளர்ந்து வருகிருனே. சென்னேயின் நடுவில் எப்படித் தியாகராய நகரில் மாளிகைக்குள்ளிருப் பவன் அகப்படுவான். செல்வநாதரோடு காரில் சில சமயங் கள் வெளிக் கிளம்பிச் செல்லும்போது அறிவதன்றி வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/60&oldid=580113" இலிருந்து மீள்விக்கப்பட்டது