உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - துன்பச் சுழல்

சோலே மாளிகைக்குள் புகுந்தார்கள். முருகன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அவன் மனேவியையும் காணுேம். தாங்கள் தனியனைத் தவறவிட்டு வந்ததைப்பற்றி மெள்ள மெள்ளச் சொல்லத் தொடங்கினர்கள். அவர்கள் முழுவ தும் கூறி முடிப்பதற்குள் கடந்ததை ஒருவாறு அறிந்த அவன் அவர்களே வாயில் வந்தபடி யெல்லாம் ஏசின்ை. அவர்கள் கொண்டுவந்த அந்த இருபது ரூபாயையும் பெற் றுக்கொண்டான். அந்த இரவுக்கு அவர்களுக்குச் சோறு கிடையாது என்று கூச்சலிட்டான். அவனுடைய மனைவி அப்போதுதான் வந்தாள். அவள் இளையவள். அவனைப் போன்றும் அவனுடைய அப்பனேப் போன்றும் அப்படி ஒன்றும் கொடுமையானவள் அல்லள் அவள். எப்படியோ அவர்களோடு வந்து சேர்ந்தாள். அவள் ஒரு அைைத. தனி யாகத் திரிந்து கொண்டிருந்தபோது, முருகன் தங்கசாலையில் அவளேக்கண்டு தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து வைத் துக்கொண்டான். அவளுக்கு இந்தப் பிள்ளைகள் மீது எப் போதும் கருணைதான். ஆகவே முருகனிடம் அவர்களுக்காக பரிந்து பேசிள்ை. அதற்குள் திருடச் சென்ற மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஆளுக்கு ஐம்பதுக்குக் குறையாது கொண்டு வந்தார்கள். அனைவரும் உண்டார்கள். எல்லோருக்கும் தனியனைப் பற்றிய கவலையே பெரிதாகப் போய் விட்டது. அவன் ஒருவேளை அனைவரையும் காட்டிக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று வருந்தினர் கள்.என்ருலும் அவன் அவ்வளவு கெட்டிக்காரன் அல்லன்

என்றும், அந்த இடத்திலிருந்து வெளியே சென்றறியாதவன் என்றும் கூறி மன அமைதி பெறலானர்கள். எனினும் மறுநாள் காலையில் மார்த்தாண்டன் வந்து அவனேப்பற்றிக் கேட்டால் என்ன சொல்வது என்பதே அவர்களுக்குப் பெருத்த துன்பத்தை விளேத்தது. முருகன் உட்பட யார் யாருக்கு என்னென்ன துன்பங்கள் வருமோ என்று அஞ்சி ர்ைகள். பலப்பல பேசினர்கள். முடிவில் எப்படியும் மறு நாள் தனியனைக் கண்டு பிடித்தாக வேண்டும் என்ற முடி

வோடு உறங்கச் சென்ருர்கள். .

மறுநாள் விடிந்ததும் தென்னஞ்சோலை மாளிகைக்கு மார்த்தாண்டன் விரைந்து வந்தான். முன்னுள் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/59&oldid=580112" இலிருந்து மீள்விக்கப்பட்டது