உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் ஒரு திவலை 63

மறுநாள் பொழுது விடிந்ததும் தான் முறைப்படி செய்ய வேண்டிய பணிகளேயெல்லாம் செய்து முடித்துவிட்டு செல்வநாதர் காலைச் சிற்றுண்டிகொண்டார். மணி பத்து ஆகிவிடவே, நேராகத் திருவல்லிக்கேணி சென்று அந்தப் புத்தகக் கடையினுள் நுழைந்தார். கடைக்காரர் மூலம் தனி யன் முன்னுள் மாலே நான்கு மணிக்கு வந்து அவர் குறிப் பின்படி நூல்களே எடுத்துக்கொண்டு நூறு ரூபாய் கொடுத்து பாக்கி ஐம்பது ரூபாயும் பெற்றுக்கொண்டு திரும்பினுன் என்பதை அறிந்தார். அவன் கள்ளன் என்ற ஐயம் அவருக்குச் சற்றுக் குறைந்தது. அவன் உண்மையில் கள்ள்னக இருப்பாயிைன் நூறு ரூபாயை அப்படியே அல்லவா எடுத்துச் சென்றிருக்கவேண்டும்? தான் இட்ட வேலையைச் செய்துவிட்டு, கொடுக்கவேண்டிய ரூபாயையும் கொடுத்து விட்டு, மிகுதியையா எடுத்துக்கொண்டு ஓடியிருப் பான்? திருடன் இப்படியும் செய்வான? ஆனல் அவன் எங்கே? எண்ணி எண்ணிப் பார்த்தார். ஒன்றும் பதில் கிடைக்கவில்லே. ஒரு வேளே திரும்பும்கால் திருட்டு எண்ணம் வந்து அப்படி செய்திருப்பானே என்று நினைத்தார். அவர் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமாவது சிக்கியிருப்பான் என்ற எண்ணமே அவருக்கு உறுதியாயிற்று.

ஆம், அவன் மறுபடியும் அக்கள்வர் கூட்டத்தாரிடம் சிக்கினன். மார்த்தாண்டன் ஆணேயின்படி அவனது மகனும், அழகியும், பிள்ளைகளும் சென்னே முழுவதும் கடந்த சில திங்களாகத் தேடித் தேடி அலுத்து விட்டார்கள். என்ருலும் மார்த்தாண்டன் அவர்களே இலேசில் விடுவதாகக் காணவில்லை. அந்தப் பையன் வெளியிலிருந்தால் என்ருவது உண்மையில் தனது திருட்டெல்லாம் வெளியாகி விடும் என்று அவன் திட்டமாக நம்பின்ை. எனவே எப்படியும் அவனேக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கட்டாய ஆணை யிட்டான். அனைவரும் சென்னே நகரெங்கும் தேடினர். மாளிகைக்குள்ளிருக்கும் தனியன் எங்கே அவர்கள் கண் ஆணுக்குத் தெரியப் போகிருன். நூல்கள் வாங்கிவரப் புறப் பட்ட அந்த மாலேயிலும்கூட மார்த்தாண்டன் அனுப்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/64&oldid=580117" இலிருந்து மீள்விக்கப்பட்டது