பக்கம்:துன்பச் சுழல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 துன்பச் சுழல்

சிறுவரும், முருகனும் அழகியும் மாலையில் மவுண்டுரோட்டில் சினிமா பார்ப்பதற்காகத் திருவல்லிக்கேணியிலிருந்து அப்படியே டிராம் வ்ண்டிப் பாதை வழியே ஐந்து மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். எங்குச் சென்ருலும் என்ன கூட்டம் கண்டாலும் அவர்கள் காற்புறமும் சுற்றிப் பார்த்து எங்காவது தனியன் கிடைப்பான என்ற எண்ணத் தோடே சென்ருர்கள். தாதி மனம் நீர்க்குடத்தேதான் என்பது அவர்கள் கடத்தையில் மிக மெய்யாக இருந்தது. அந்த டிராம் பாதை வழியே அவர்கள் கடந்து வந்த நிலை யிலே, பைகிராப்ட்ஸ் ரோட்டைக் கடக்க வேண்டிய கட்டத்தில் அவள்-ஆம்-அழகி-தனியனேக் கண்டு கொண்டு விட்டாள். -

செல்வநாதர் சொற்படியே அருகில் உள்ள புத்தகக் கடையில் வேண்டிய நூல்களே வாங்கிக்கொண்டு டிராம் லேனுக்கு அடுத்த பஸ் கிற்குமிடத்தில் பதின்மூன்ரும் எண்ணுள்ள பஸ்ஸுக்குக் கால் மணி நேரத்துக்கு மேல் அவன் காத்துக்கிடக்க நேரிட்டது. பாவம், அவன் கெட்ட காலமோ என்னமோ, இரண்டு பஸ்கள் இடமில்லாமல் அவனே விட்டுச் சென்றன. மூன்ருவது பஸ் வருவதற்கு முன் தான் அழகி, அவன் பஸ் கிற்குமிடத்தில் புத்தகக் கட்டுடன் நிற்பதைக் கண்டாள். உடனே முருகனே அழைத்து அந்தப் பையன் நிற்பதைக் காட்டினுள்.

அந்தக் கூட்டத்தின் நடுவிலேயிருந்து எப்படி அந்தப் பையனே அழைத்துக்கொண்டு போவது என்று இரண்டொரு கொடியிலே முடிவு செய்து விட்டார்கள். முருகன் சற்றுப் பிரிந்து தனியே போய்விட்டான். அழகி ஓடிச் சென்று தனியனேக் கட்டிக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளே முன்னமே தனியனும் நன்கு அறிவான். ஆதலால் ஏதோ அவளுக்கு துன்பம் வந்துவிட்டதென்று கருதி அவனும் அழ ஆரம்பித்துவிட்டான். மக்கள் கூடி விட்டனர். அழகி அவனைத் தன் தம்பி யென்றும், வீட்டை விட்டு ஒடிப் பல நாட்கள் ஆகிவிட்டன வென்றும், அவனைத் தேடித் தேடிக் காணுமல் அலேந்து வருந்தினள் என்றும் தற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/65&oldid=580118" இலிருந்து மீள்விக்கப்பட்டது