பக்கம்:துன்பச் சுழல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI

விட்ட குறை

தென்னஞ்சோலை மாளிகையினுள் தனியன் புகுந்த போது கன்கு இருட்டிவிட்டது. அவன் முன் இருந்த இடத்தை நன்கு தெரிந்து கொண்டான். அழகி அவனைக் கண்டு பிடித்தாள் என்ருலும் உள்ளுக்குள் பாவம் ஏன் அவனே இப்படி அவதிக்குள்ளாக்கிைேம் என்று எண்ணிக் கொண்டே வந்தாள். நல்ல இடத்தில் வளர்ந்து வந்தவனே இங்குக் கொண்டு சேர்த்ததற்குத் தான்தானே காரணம் என்று எண்ணும்போது உண்மையில் அவளுக்கு வருத்த மாகத்தான் இருந்தது. ஆனல் மார்த்தாண்டன் அவளே அன்று நன்கு புகழ்வான் என்ற எண்ணத்திலே அந்த வருத்தத்தை மறந்து இருந்தாள். எப்படியோ சோலை மாளி கைக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். முருகன் தனியனிட மிருக்த ரூபாய் ஐம்பதையும், நூல்களேயும் வாங்கி வைத்துக் கொண்டான். சிறிது நேரம் கழித்து மற்றவர்களும் வந் தார்கள். அவ்விடம் தனியனேக் கண்டவுடன் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்கள். அன்று அவனே அனைவரும் நன்கு உபசரித்தார்கள். இழந்த மைந்தனைத் திரும்பவும் கண்ட் தங்தையார் களித்ததாக இயேசு கூறும் கதைக்கு ஒப்ப அன்று அவர்கள் மகிழ்ச்சி சிறந்திருந்தது. அனைவரும் நன்கு உ ண் ட ன ர். மறைந்தவன் கண்டு பிடிக்கப்பட்டான். சென்றவன் திரும்பி வந்தான்.

மறுநாள் பொழுது விடிந்ததும் மார்த்தாண்டன் வெகு வேகமாக உள்ளே வந்தான். அவன் தனியனேக் கண்டதும் ஆத்திரத்தால் ஓங்கி அடித்து விட்டான். அவன் ஒவென்று கதறினன். அனேவருக்கும் அவன்மேல் பரிவு உண்டாயிற்று. என்ன உண்டானலும் என் மார்த்தாண்டன் முன்னின்று பேச முடியாதே. பிறகு அவனே என்னென்னவோ கேள்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/67&oldid=580120" இலிருந்து மீள்விக்கப்பட்டது