பக்கம்:துன்பச் சுழல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குறை - 67

கள் கேட்டான். எதற்காவது அவன் வாய்திறந்து ஏதாவது பதில் சொன்னல் தானே. மனம் மட்டும் இன்னும் தன் துன்பச் சுழல் ஓயவில்லை என்று காட்டிற்று. மார்த்தாண்டன் மேலும் அவனே . அடிக்கத் தொடங்கின்ை. அதற்குள் முருகன் வந்து அவனத் தனியே அழைத்துக்கொண்டு போய்விட்டான். மார்த்தாண்டன் உள்ளே சென்றதும் மறைந்திருந்த அழகி வந்து தனியனேத் தனியாக அழைத்துக் கொண்டு சென்று ஆறுதல் கூறினள். பாவம், தன்னல் தானே அவன் இத்தனைக் கொடுமைகளுக்கும் உள்ளாக நேர்ந்தது என்று எண்ணும்போது அவள் கண்களில் நீர் வழிந்தோடி வந்தது. தன் பொருட்டு அழும் அழகியைக் கண்டதும், தனியன் சற்று ஆறுதல் பெற்று அழுகையை கிறுத்தின்ை. முன்னுள் அப்படிக் காட்டிக் கொடுத்த அவளே அன்று அப்படி அழுகிருள் என்பதைக் காண அவனுக்கே வியப்பாக இருந்தது. அவன் வியப்பினை முகத்தால் அறிந்தாளோ என்ன்வோ, அழகி வாய்விட்டே பேச ஆரம்பித்துவிட்டாள். தம்பி, இந்தப்பாவி யல்லவா உன் துன்பத்துக்குக் காரணமானேன். உன்னே நேற்று நான் காட்டிக் கொடுக்காவிட்டால் இந்தக் கதி உனக்கு இல்லையே. இரு எப்படியாவது உனக்குச் சமயத்தில் உதவி செய்து என்னலானதைச் சாதிக்கிறேன். இப்போது நீ வருந்த வேண்டாம். உனக்கு என்ன வேண்டு மாலுைம் என்னே க் கேள். நான் தருகிறேன், என்று தேற்றிள்ை. அ. வ ள் தேற்றுதல் அவனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. என்ருலும் அக்கள்ளர் குழுவைவிட்டு எப்படிப் போவது என்பதே அவனுக்குப் பெருத்த சிந்தனையாகி விட்டது, அதற்கு மேலாகச் செல்வங்ாதர் ரூபாய் கொடுத்துத் திரும்பிச் சீக்கிரமே வாவென்று சொல்லி அனுப்பினரே, அந்த அன்பு முகம்-அவன் கண் எதிரே காட்சியளித்தது. அவன் கொண்டுவந்த பணமும் நூல்களும்தாம் போயினவே இனி, தப்பிச் சென்று அங்கே அவர்முன் நின்ருலும் அவர் தன்னே நம்புவாரா என்றும் எண்ணினன். மற்றும், அவர் இருப்பது மாம்பலம் என்பது தெரியும்ே ஒழிய, அந்த' இடத்திற்குத் தனியே செல்ல வழி தெரியாதே எனத் தயங் கின்ை. இவற்றை யெல்லாம் எண்ணிக்கொண்டு, வெளியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/68&oldid=580121" இலிருந்து மீள்விக்கப்பட்டது